Close
நவம்பர் 21, 2024 5:36 மணி

ஷிம்லாவில் உக்ரைன்-ரஷ்யா போர்நிறுத்த பேச்சுவார்த்தை..?!

பிரதமர் மோடி - ஜெலன்ஸ்கி-புதின்

உக்ரைன் -ரஷ்யா போரை முடிவுக்கு கொண்டுவரும் விதமாக முதலில் சோவியத் ரஷ்யா சென்ற பிரதமர் மோடி அந்த நாட்டின் அதிபர் விளாடிமிர் புதினை சந்தித்து பேசினார். பின்னர் உக்ரைனுக்கு சென்று அந்த நாட்டு அதிபர் ஜெலன்ஸ்கியை சந்தித்துப் பேசினார்.

உக்ரைன் அதிபர் பிரதமர் மோடியிடம், அமைதி பேச்சு வார்த்தை நடத்த ஏற்பாடு செய்யுங்கள் என வெளிப்படையாக கோரிக்கை வைத்தார். அதன் பின்னர் இந்தியா தலைமையில் நடக்கும் அமைதிப்பேச்சு வார்த்தையில் சோவியத்ரஷ்யா பங்கேற்கும் என புதின் அறிவித்தார்.

இந்நிலையில் அமெரிக்கா சென்ற பிரதமர் மோடியிடம் அமெரிக்க அதிபர் ஜோபிடன் உக்ரைன்- ரஷ்யா போரை நிறுத்த இந்தியா உதவ வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார். இதனைத் தொடர்ந்து இந்தியா தலைமையில் அமைதிப்பேச்சு வார்த்தைக்கான ஏற்பாடுகள் வேகமாக நடந்து வருகின்றன.

இந்தியாவில் சிம்லாவில் உக்ரைன்- ரஷ்யாவின் பிரதிநிதிகள் சந்தித்து பேசுவார்கள் என தகவல்கள் வெளியாகி உள்ளன. சிம்லாவை தவிர்த்து இந்தியாவில் வேறு சில இடங்களும் பேச்சு வார்த்தை நடத்த பரிசீலிக்கப்படுகின்ற்ன. இதற்கான தேதி இன்னும் அறிவிக்கப்படாவிட்டாலும், அதற்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடக்கின்றன. விரைவில் பேச்சு வார்த்தைகள் தொடங்கும் என தகவல்கள் வெளியாகி உள்ளன.

ஏற்கனவே ரஷ்ய அதிபர் புதின் இந்தியா, சீனா மற்றும் பிரேசில் நாடுகள் முன்னிலையில் போர்நிறுத்த பேச்சுவார்த்தையில் கலந்துகொள்ள சம்மதம் தெரிவித்திருந்தார். தற்போது அமெரிக்காவும் பிரதமர் மோடியிடம் போர்நிறுத்தம் செய்ய உதவ வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளதால் இந்தியாவில் பேச்சுவார்த்தை நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிகிறது.

அதன் அடிப்படையிலேயே ஷிம்லா பேச்சுவார்த்தைக்கான இடமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது என்றும் தெரிகிறது. இன்னும் சில இடங்களும் பரிசீலனையில் உள்ளதாகவும் கூறுகிறார்கள்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top