Close
நவம்பர் 22, 2024 5:28 மணி

‘நாஞ்செலி’ என்ற வீரப்பெண்ணை தெரியுமா..? மறந்ததா..? மறைக்கப்பட்டதா..?

நாஞ்செலி (கோப்பு படம்)

இப்படியான ஒரு சோகத்தை நீங்கள் கேள்விப்பட்டு இருக்கீங்களா..? இந்த சோகம் நம்மையும் கோபமூட்டச் செய்யும்.

நம்ம பக்கத்து மாநிலமான கேரளாவிலே மைனாரிட்டி ஜாதியை சேர்ந்த பெண்களோட மார்புக்கு வரி விதிக்கும் முறை இருந்த கொடுமையான காலக்கட்டம் ஒன்று இருந்தது தெரியுமா?.

நாஞ்செலி என்ற பெயர்கொண்ட ஒரு வீரப்பெண், இதே ஒடுக்கப்பட்ட ஜாதியைச் சேர்ந்த அழகான பெண். அப்போது அவர் 30 வயதை நெருங்கிக் கொண்டிருந்தார். இந்த அநியாயமான வரி விதிப்பை எதிர்த்து கடுமையாக போராடிக் கெண்டிருந்தார்.

குறிப்பாக திருவிதாங்கூர் சாம்ராஜ்ஜிய அரசுக்கு மார்பு வரி செலுத்தவும் மறுத்து விட்டார். பல மாதங்கள் ஆகியும் அவர் வரி கட்டவில்லை. பல முறை அரசு கேட்டும் வரி கட்டமுடியாது என்று மறுத்துவிட்டார். இதில் கொடுமை என்னவென்றால் மார்பை மறைக்க விரும்பும் பெண்கள் மட்டுமே கட்ட வேண்டிய வரி இது. மறைக்க விரும்பாமல் மார்பை மூடாமல் வைத்திருந்தால் வரி கிடையாது. (கோபம் வருகிறதா..?)

இதனிடையே ஒரு நாள் அரசின் வரிவிதிப்பாளர் நாஞ்செலியைத் தேடி வீட்டுக்கே வந்து விட்டார். வீட்டுக்கு வெளியே நின்று,’உனது மார்புக்கு வரி கட்டி விட்டாயா?’ என்று கோபமாக கேட்டார்.

அசராத நாஞ்செலி ‘வரியா.. மார்புக்கா?’ கொஞ்ச நேரம் காத்திருங்கள். இதோ வருகிறேன் என்று கூறிவிட்டு வீட்டுக்குள் சென்றார், நாஞ்செலி.

ஓஹோ..இன்னிக்கு அவளே பயந்து வரி செலுத்திவிடுவாள். வரிப்பணத்தை எடுத்து வருவாள் ‘ என்று மனதுக்குள் கணக்குப்போட்டு நின்றார் வரி விதிப்பாளர்.

வீட்டினுள் போன நாஞ்செலி கையில் வாழை இலைகளை அறுக்கும் அரிவாளுடன் வெளியே வந்தார்.

‘மூடனே.. இது இருந்தால்தானே வரி கேட்பாய்?’ என்றவாரே தனது இரு மார்பகங்களையும் வரி விதிப்பாளர் கண் எதிரிலேயே வெட்டி எறிந்தார், நாஞ்செலி. நாஞ்செலியின் இரு மார்புகளும் உடலை விட்டு பிரிந்தன. மார்பகங்களை வெட்டி வீசியதால் பெருகிய குறுதிச்சேற்றில் வீழ்ந்து நாஞ்செலியின் உயிரும் பிரிந்தது.
அதிர்ந்துபோய் நின்றான், வரிவிதிப்பாளன். இப்படி ஒரு மானமுள்ள பெண்ணா..?

அந்த காலத்தில் கேரளத்தையே அதிர வைத்த சம்பவம் இது. அது மட்டுமல்ல நாஞ்செலியின் இந்த செயலால் அதிர்ந்து போன திருவிதாங்கூர் அரசு, இந்த வரிவிதிப்பை ரத்து செய்துவிட்டது. இந்த சம்பவமே அந்த வரிவிதிப்பை தடைசெய்ய வைத்த சம்பவமாக விளங்கியது.

கேரளத்தில் சேர்தலா அருகே ‘முலைச்சிபுரம் ‘என்ற இடத்தில் இந்த துயரம் நிறைந்த வரலாற்று சம்பவம் நடந்துள்ளது. ஊரின் பெயர்க்காரணமும் அதுதான்.

ஆனால் இந்த அதிரடி மங்கை நாஞ்செலியை நினைவு கூறும் வகையில் சேர்தலா உள்ளிட்ட கேரளத்தின் எந்த பகுதியிலும் ஒரு நினைவுச்சின்னமோ சிலையோ கூட கிடையாது. இப்போதைக்கு நாஞ்செலியின் பரம்பரையில் ஒரே ஒருவர்தான் உயிரோடு உள்ளதாக கூறுகிறார்கள். அவர் நாஞ்செலிக்கு பேத்தி முறை. 67 வயதாகும் அவரது பெயர் லீலாம்மா என்றும் சொல்கிறார்கள்.

இந்த சம்பவம் குறித்து அவரிடம் கேட்டபோது, ” நாஞ்செலி தம்பதியருக்கு குழந்தைகள் இல்லை. நாஞ்செலியின் சகோதரி பேத்தி நான். எனது முன்னோர்கள் நாஞ்செலியின் அழகைப் பற்றி கூறியுள்ளனர். அந்த துயரச் சம்பவம் குறித்தும் விளக்கமாக எங்களுக்கு கூறியுள்ளனர். துணிச்சலான அவரது செயல் அப்போதையை திருவாங்கூர் அரசையே அதிர வைத்ததாகவும் கூறுவார்கள்” என்றார்.

இதற்கிடையில் கோட்டயத்தை சேர்ந்த வரலாற்று ஆராய்ச்சியாளர் அஜே சேகர், ” மனித உரிமைக்கே சவால் விடுகின்ற இது போன்ற வரிவிதிப்புகளை எதிர்த்து போராடிய அந்த பெண்ணை தற்கால மகளிர்கள் கூட மறந்துபோனது துரதிர்ஷ்டம். இவர்களை போன்றவர்களை மறப்பது மனசாட்சியற்ற செயல்” என்று வேதனை வெளியிட்டார்.

என்னம்மா மகளிர் தினம் கொண்டாடுறீங்க..? இவர்களையெல்லாம் மறந்து விட்டு மகளிர் தினம் கொண்டாட முடியுமா.!? கொஞ்சம் யோசிங்க சோதரிகளே..!  வரலாறு மறந்துவிட்டதா..? அல்லது மறைக்கப்பட்டதா..?

திருவிதாங்கூர்- சிறுகுறிப்பு

திருவிதாங்கூர் மாநிலம் என்றும் அழைக்கப்பட்டது. இது 1858 வரை முந்தைய பழமையான இந்து இராச்சியமாக இருந்தது, மேலும் இந்தியாவின் சமஸ்தானம் திருவிதாங்கூர் அரச குடும்பத்தால் ஆளப்பட்டது, மேலும் திருவாங்கூர் மாநிலத்தின் தலைநகரம் திருவனந்தபுரம் அல்லது பத்மநாபபுரம் ஆகும்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top