தமிழக அரசின் டாக்டர் இராதாகிருஷ்ணன் நல்லாசிரியர் விருது பெற்ற மேலப்பட்டி பள்ளியின் பட்டதாரி ஆசிரியர் மகேஸ்வரனுக்கு கிராம மக்கள் சார்பாக விழா எடுத்து பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
நல்லாசிரியர் விருது பெற்ற மகேஸ்வரனின் பல்வேறு சாதனைகளுக்காக தமிழக அரசால் இவ்விருது வழங்கப்பட்டது. தொடர்ச்சியாக 20 ஆண்டுகளுக்கு மேலாக இக்கிராமத்தில் பணிபுரிந்து வரும் இவர் பல்வேறு திறன்மிகு மாணவச் செல்வங்களை உருவாக்கி, மாணவர்களின் உயர்வுக்கு வழிகாட்டியாக இருந்து வருகிறார்.
இந்நிலையில், இவருக்கு மேலப்பட்டி கிராம மக்கள் சார்பில் பாராட்டு விழா நடைபெற்றது. விழாவில் ஊராட்சி மன்றத் தலைவர் சக்திவேல், துணைத்தலைவர் சின்னப் பொண்ணு செல்லதுரை, வார்டுஉறுப்பினர் சூரியவள்ளி பரமசிவம், விடியல் இளைஞர் நற்பணி மன்றத்தின் தலைவர் ராஜ செல்லப்பாண்டி, செயலாளர் யுவராஜ், பொருளாளர் ராஜா,
பள்ளி மேலாண்மைக் குழுத் தலைவர் தனலெட்சுமி மணிகண்டன், கிராமக் கல்விக் குழுத் தலைவர் ஐயப்பன், பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் மணிகண்டன், மற்றும் இல்லம் தேடி கல்வி ஆசிரியர்கள் ரெஜினா, நதியா, சரண்யா, மகாலெட்சுமி, நந்தினி, காயத்ரி, பொது மக்கள், பெற்றோர்கள், முன்னாள் மாணவர்கள் , ஊரின் முக்கிய பிரமுகர்கள் ஆகியோர் பங்கேற்று ஆசிரியர் மகேஸ்வரனுக்கு ஆளுயர மாலையுடன் சால்வை அணிவித்து நினைவுப்பரிசு வழங்கி வாழ்த்தினர்.
விழாவில், மேலப்பட்டி பள்ளியின் தலைமை ஆசிரியர் சீத்தாலெட்சுமி, ஆசிரியர்கள் சரவணன், ஜெயந்தி,இந்திரா, ஜெயலெட்சுமி,கற்பகவள்ளி, சத்துணவு பணியாளர்கள் ரெத்தினப்பா,பழனிச்சாமி, சுந்தரம்பாள், காலை சிற்றுண்டி பணியாளர்கள் சத்யா,பிரமிளா,கிரிஜா,சுகாதாரப் பணியாளர் பழனியம்மாள் பழனிச்சாமி மற்றும் பள்ளியின் மாணவர்கள் ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்தினர்.