துணை முதலமைச்சர் உதயநிதிக்கான அதிகாரங்கள் என்னென்ன என்பதை முடிவு செய்வது அக்டோபர் 8ம் தேதி நடக்கவுள்ள அமைச்சர்களின் கூட்டத்தில் இறுதி செய்யப்படும் என தகவல் வெளியாகி உள்ளது.
முதலமைச்சர் மு.க.ஸ்டான் மாற்றியமைத்த புதிய அமைச்சரவையில் செந்தில்பாலாஜி, ஆர். ராஜேந்திரன், கோவி.செழியன், சோ.மு. நாசர் உட்பட 4 பேர் சேர்க்கப்பட்டனர். மேலும் 6 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றப்பட்டது. அமைச்சராக இருந்த உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சராக நியமிக்கப்பட்டார்.
அதைத்தொடர்ந்து புதிய அமைச்சர்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். இந்த அமைச்சரவை மாற்றத்திற்கு பிறகு முதல் முறையாக வரும் 8ம் தேதி அமைச்சரவைக் கூட்டம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடக்கவுள்ளது. இதுதொடர்பான கடிதம் அனைத்து அமைச்சர்களுக்கும் அனுப்பப்பட்டுள்ளதாக தெரிகிறது.
இதற்கிடையே துணை முதலமைச்சர் உதயநிதிக்கான அதிகாரங்கள் என்னென்ன என்பது குறித்து அக்டோபர் 8ம் தேதி நடக்கவுள்ள அமைச்சரவைக் கூட்டத்தில், ஒப்புதல் வழங்கப்பட உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.