திருச்சியில் இருந்து சார்ஜா புறப்பட்ட ஏர் இந்தியா விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு.காரணமாக விமான சக்கரங்கள் உள்ளுக்குள் உட்காராமல் வெளியேவே நிற்பதாக தெரியவந்துள்ளது.
அதனால் சுமார் 1 மணி நேரத்திற்கு மேலாக திருச்சிக்கு மேலாக வானத்தில் வட்டமடித்துக்கொண்டிருப்பதாக தெரியவந்துள்ளது.
141 பயணிகளுடன் மாலை 5.40 மணிக்கு புறப்பட்ட விமானம் விமானத்தின் சக்கரங்கள் உள்ளே செல்லாததால்,எரிபொருள் தீர்வதற்காக வட்டமடிப்பதாக கூறப்படுகிறது. விமானத்தில் எரிபொருள் குறைந்தபிறகு தரையிறக்க விமானிகள் முயற்சி.செய்வார்கள் என்றும் கூறுகிறார்கள்.
விமானம் தரை இறங்கும்போது தீப்பற்றுவதை தவிர்ப்பதற்காகவே எரிபொருள் குறைந்த பிறகு விமானத்தை தரையிறக்கத் திட்டமீட்டுள்ளனர்.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக திருச்சி விமான நிலையத்தில் 18 ஆம்புலன்ஸ்கள் தயார் நிலையில் நிறுத்தப்பட்டுள்ளன. இதனால் திருச்சி விமான நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் கடைசியாக வந்த தகவலின்படி விமானம் பத்திரமாக தரை இறக்கப்பட்டதாக தெரியவந்துள்ளது. சாதுர்யமாக செயல்பட்ட விமானிகளுக்கு பாராட்டுகள் குவிகின்றன.
உறவினர்களை ஷார்ஜா விமானத்தில் ஏற்றிவிட்டு சென்ற உறவினர்கள் விமானத்தில் கோளாறு என்ற செய்தி கேட்டு பதறி அடித்து மீண்டும் விமான நிலையத்துக்கு வந்து வட்டமடித்த விமானத்தை பார்த்து வேண்டாத தெய்வங்களை எல்லாம் வேண்டி நின்றனர்.
விமானத்தை பத்திரமாக தரையிறக்கிய கேப்டன் டேனியல் பெலிக்ஸ்க்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன. பாதுகாப்பு ஏற்பாடுகளை துரிதமாக செய்த விமான நிலைய அதிகாரிகளும் பாராட்டுக்குரியவர்கள்.