“உங்கள் மீது யாரேனும் கற்கள் வீசினால், அதைக் கொண்டு கட்டடம் எழுப்புங்கள்!” – இதைச் சொல்லியவர் இந்தியாவில் மட்டுமே காலூன்றியிருந்த ஒரு வியாபார குழுமத்தை உலகெங்கும் எழுப்பி, அக்குழுமத்தையே உலக சந்தையில் இந்தியாவின் அடையாளமாய் மாற்றியவர் ரத்தன் நாவல் டாடா.
டாடா’ என்னும் பாரசீகச் சொல்லுக்கு ‘அப்பா’ என்பது பொருள். ‘இரத்தன்’ என்னும் பாரசீகச் சொல்லுக்கு ‘மணி’ என்பது பொருள். இரத்தன் டாடா, ‘அப்பா’ என்று அழைக்கப்படும் ஒரு பாரசீகக் குடும்பத்தை சேர்ந்த மணியான தொழிலதிபர். அவர் தலைவராக இருக்கையில் டாடா குழுமம் பல வளர்ச்சிகளைக் கண்டது.
ரத்தன் டாடா ஒரு இந்திய தொழிலதிபர், முதலீட்டாளர் மட்டுமல்ல பரந்த மனம் படைத்த பரோபகாரர். அவரின் தொண்டு அறக்கட்டளைகளுக்கு தொடர்ந்து தலைமை தாங்கினார்.மிகவும் உயர்ந்த குணம் படைத்த, பண்புள்ள இந்த தொழிலதிபர்.இந்திய இளைஞர் மற்றும் தொழிலதிபர்களின், தொழில் செய்ய முனைவோர்களின் முன்மாதிரி எனலாம்.
நம் உணவில் உப்பாய், தேநீராய், நம் கையில் கடிகாரமாய், நம் செல்போனில் சிம் கார்டாய், நம் வீட்டுத் தூணில் இரும்பாய், நாம் பயணிக்கும் காராய், நம் டிவியில் டி.டி.எச்சாய், நாம் அணியும் நகையாய்.., ஒவ்வொரு இடத்திலும் கால் ஊன்றி தடம் பதித்த டாடா குழுமத்தின் தலைவர் இன்று நம்மிடமில்லை.
என்னால் இறக்கை விரித்து பறக்க முடியாத நாளே, என் வாழ்க்கையின் சோகமான நாள்” என்பார் ரத்தன் டாடா. அவரது சிறகுகள் இன்னும் பல்லாண்டு காலம் பல இடங்களில் விரிந்து பறக்கும்.காற்றில் சில காலம் இளைப்பாறட்டும் இன்னொரு பெண்மணி ஈன்றெடுப்பாள்.
#இங்கிலாந்திலிருந்துசங்கர் 🎋#