Close
நவம்பர் 22, 2024 5:26 மணி

கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் எந்த பிளாட்பார்மில் எந்த பஸ் நிற்கும்? தெரிஞ்சுக்கங்க..!

கிளாம்பாக்கம் பேருந்து நிலையம்

கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திலிருந்து திருவண்ணாமலைக்கு செல்லக்கூடிய பேருந்துகள் நிற்கும் நடைமேடைகள் பற்றிய முழு விவரம் இந்த செய்தியில் தரப்பட்டுள்ளது.

தீபாவளி திருநாளை முன்னிட்டு தங்கள் சொந்த ஊருக்கு செல்லும் பொது மக்களின் வசதிக்காக சென்னை கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திலிருந்து திருவண்ணாமலை மற்றும் மற்ற ஊர்களுக்கு செல்லக்கூடிய பேருந்துகள் எந்த நடைமேடையில் நிற்கும் என்ற அட்டவணை போக்குவரத்து துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ளது. . திருவண்ணாமலைக்கு செல்லக்கூடிய பேருந்துகள் நடைமேடை 7 ல் நிற்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன் விவரம் வருமாறு;

நடைமேடை : 01

நாகர்கோவில் மார்த்தாண்டம் , கன்னியாகுமரி, திருநெல்வேலி தூத்துக்குடி திருச்செந்தூர், செங்கோட்டை செல்லக்கூடிய பேருந்துகள் நிற்கும்

நடைமேடை : 02

பாபநாசம் ஸ்ரீ வில்லிபுத்தூர்,சிவகாசி, திருவனந்தபுரம்,உடன்குடி, கருங்கல் செல்லக்கூடிய பேருந்துகள் நிற்கும்.

நடைமேடை : 03

மதுரை,சிவகங்கை,காரைக்குடி,தொண்டி,தேவக்கோட்டை,பரமக்குடி, இராமேஸ்வரம், ஏர்வாடி, வீரசோழன் , கீரமங்கலம்,சாயல்குடி , பொன்னமராவதி, கமுதி செல்லக்கூடிய பேருந்துகள் நிற்கும்

நடைமேடை : 04

திருச்சி , கும்பகோணம் , கரூர் , தஞ்சாவூர் , பொள்ளாச்சி,மன்னார்குடி , திண்டுக்கல், பேராவூரணி , தேனி, பட்டுக்கோட்டை,கம்பம் / குமுளி செல்லக்கூடிய பேருந்துகள் நிற்கும்.

நடைமேடை : 05

பெரம்பலூர்,மன்னார்குடி,அரியலூர்,நன்னிலம்,துறையூர்,வேளாங்கண்ண, கும்பகோணம், மயிலாடுதுறை,தஞ்சாவூர் , திருவாரூர், நாகப்பட்டினம்., செல்லக்கூடிய பேருந்துகள் நிற்கும்.

நடைமேடை : 06

சேலம்,எர்ணாகுளம்,திருப்பூர்,குருவாயூர்,பொள்ளாச்சி,ஊட்டிTTA, மேட்டுப்பாளையம், கோயம்புத்தூர்,ஈரோடு , நாமக்கல், கரூர் செல்லக்கூடிய பேருந்துகள் நிற்கும்.

நடைமேடை : 07

வந்தவாசி, திருவண்ணாமலை, போளூர் , செஞ்சி,மேல்மலையனூர்,செல்லக்கூடிய பேருந்துகள் நிற்கும்.

நடைமேடை : 08

திண்டிவனம், விழுப்புரம், திருக்கோவிலூர், சங்கராபுரம், கள்ளக்குறிச்சி, ஜெயங்கொண்டம் , அரியலூர் , செல்லக்கூடிய பேருந்துகள் நிற்கும்

நடைமேடை : 09

புதுச்சேரி,கடலூர், சிதம்பரம்,நெய்வேலி, காட்டுமன்னார்கோவில், விருத்தாச்சலம்,திட்டக்குடி செல்லக்கூடிய பேருந்துகள் நிற்கும்.

நடைமேடை : 10 & 11 & 12 & 13 & 14

ஆம்னி பேருந்துகள் நிற்கும் இடம்.

மாதவரம் புதிய பேருந்து நிலையம்:

பொன்னேரி, கும்மிடிப்பூண்டி, ஊத்துக்கோட்டை மற்றும் செங்குன்றம் வழியாக ஆந்திர மாநிலத்திற்கு செல்லும் பேருந்துகள், வழக்கமாக இயக்கப்படும் திருச்சி, சேலம், கும்பகோணம் மற்றும் திருவண்ணாமலை பேருந்துகள். வழக்கம்போல் இயக்கப்படும் என போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top