Close
நவம்பர் 24, 2024 10:20 காலை

என்னது.. பாம்பு செல்லப்பிராணியா..? எங்கேங்க..?

ஷெட்பால் கிராமத்தில் பாம்புடன் விளையாடும் சிறுமி

பொதுவாகவே இப்போதெல்லாம் வீடுகளில் செல்லப்பிராணி வளர்ப்பது சர்வ சாதாரணமாகிவிட்டது. குறிப்பாக நாய் வளர்ப்பு. அதுகூட ஏன்னு உங்களுக்கே தெரியும். இப்போதெல்லாம் திருட்டு ஜாஸ்தியாகிப் போச்சு. அதனால் ஒரு நாய் வளர்த்தால், நாய் குரைத்து திருடனைக் காட்டிக்கொடுத்துடும். அதற்காகவே பலர் நாய் வளர்க்கிறார்கள். அதாவது அது டூ இந்த வன். ஆமாங்க..செல்லப்பிராணியாகவும் ஆச்சு, நமக்கு பாதுகாப்பும் ஆச்சு.

சரிங்க நீங்க.. ஒரு செல்லப்பிராணி வளர்க்க ஆசைப்படுறீங்கன்னு வச்சிக்குவோம். நீங்க என்ன வளர்க்க விரும்புவீங்க? ஒரு நாய், பூனை அல்லது ஏதாவது ஒரு பறவை இப்படி ஏதாவது ஒன்றைத்தான் வளர்க்க ஆசைப்படுவீங்க.

அட ஆமாங்க செல்லப் பிராணிகளை வளர்க்க விரும்புவோர் நாய், பூனை, கிளி இப்படி ஒன்றை வளர்ப்பார்கள். இப்போது பல வினோதமான வித்தியாசமான விலங்குகளையும், காட்டு விலங்குகளையும் செல்லப் பிராணிகளாக வளர்ப்பவர்கள் கூட இருக்கின்றனர்.

ஆனால் நாம் பார்க்கப்போவது பயத்தை உண்டுபண்ணும் செல்லப்பிராணி. ஆமாங்க..ஒரு கிராமமே பாம்புகளை செல்லப் பிராணிகளாக வளர்த்துட்டு இருக்காங்க. நம்ப முடியுதா? பாம்புன்னு சொன்னா படையே நடுங்கும் என்பார்கள். ஆனால் இந்த கிராமத்து மக்கள் பாம்போடுதான் வாழ்கிறார்கள். அது மட்டும் இல்லீங்க அங்கே நாய், பூனை போன்ற விலங்குகளை பார்ப்பதே அரிது. என்ன உங்களுக்கு ஆச்சரியமா இருக்கா..?

ஷெட்பால் கிராமம்

மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள ஷெட்பால் என்ற கிராமத்தில் உள்ள அனைத்து மக்களும் பாம்புகளை செல்லப்பிராணிகளாக வளர்த்து வருகின்றனர். அதிலயும் நாம பயப்படும் நாகப்பாம்புகளே அதிகமாக செல்லப்பிராணிகளாக வளர்க்கிறாங்களாம். கேக்கும்போதே படபடன்னு வருதுங்க. நேரில் பார்த்தா மயக்கமே வந்திடும்போலருக்கே.

ஆனால் பாருங்க அந்த பாம்புகளால் அந்த ஊருக்குள் எங்கு வேண்டுமானாலும் செல்ல முடியும். அதேபோல வீட்டுக்குள், வீட்டு வாசலில் இருந்து வீட்டின் படுக்கை அறை வரை இந்த பாம்புகள் சுதந்திரமாக சுற்றித் திரிகின்றன. அதனால் இந்த கிராமத்துக்கு “இந்தியாவின் பாம்பு கிராமம்” என்று பெயர் வைத்து அழைக்கப்படுகிறது.

படத்தில் சிறுவர்கள் முன்னாள் ஒரு நாகப்பாம்பு படமெடுத்து நிற்கிறது. முன்னால் உள்ள சிறுவன் வேறு ஒரு பாம்பின் வாலை பிடித்துள்ளான். அவனருகில் உள்ள சிறுமி கையில் பாம்பு ஒன்றை வைத்து இருக்கிறாள். பாம்புகள் அவர்களுக்கு விளையாட்டு பொம்மைப்போல.

கிராம மக்கள் நம்பிக்கை

நாகப்பாம்புகளை சிவபெருமானுக்கு உரியதாக கிராம மக்கள் கருதுகின்றனர். அதனால் பாம்புகளை மிகவும் கண்ணியத்துடனும் மரியாதையுடனும் நடத்துகின்றனர்.அவைகளுக்கு தனி வழிபாடுகளும், சடங்குகளும் அந்த கிராமத்தில் கடைபிடிக்கப்பட்டு நடத்தப்படுகிறது. எக்கச்சக்கமா ஊருக்குள் பாம்புகள் இங்கும் அங்கும் சுற்றித் திரிந்தாலும் தற்போதுவரை அந்த பாம்புகள் ஒருவரைக்கூட பாம்பு கடித்து உயிரிழந்ததாக கூறப்படவில்லை.

அது என்னவோ ஆச்சரியமாகத்தான் இருக்கிறது. காலம்காலமாக மனிதர்களோடு வாழ்வதால் அடுத்தடுத்து வரும் தலைமுறை மனிதர்களோடு பழகி வாழும் பரிணாம வளர்ச்சிப் பெற்றிருக்கலாம்.

ஆனால், ஒன்னுங்க, இந்த விதிவிலக்கு அந்த கிராம மக்களுக்கு மட்டும் தான். வேறொரு கிராமத்தில் இருந்து ஷெட்பாலுக்குச் செல்பவர்கள் அந்த பாம்புகளை விட்டு சற்றுத் தள்ளி இருப்பதே நல்லது என்று நம்மை எச்சரிக்கின்றனர் அந்த கிராம மக்கள்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top