Close
நவம்பர் 24, 2024 12:22 மணி

ஒரே குடியிருப்பு : 1 மனைவி; 4 காதலிகள்..! சிக்கிக்கொண்ட சீனாக்காரன்..!

மலையாள சினிமாவின் போஸ்டர் - இந்த செய்திக்கான கோப்பு படம்

சீனாவில் நடந்த இந்த சம்பவம் நமக்கு சிரிப்பை வரவழைத்தாலும் பாதிக்கப்பட்ட பெண்களை நினைக்கும்போது கவலையளிப்பதாக உள்ளது.

சீனாவின் ஜிலின் மாகாணத்தைச் சேர்ந்த ஒருவர் ஒண்ணு, ரெண்டு இல்லீங்க.. ஐந்து பெண்களை ஒரே சமயத்தில் ஏமாற்றி பண மோசடி செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சீனாவில் உள்ள ஜிலின் மாகாணத்தைச் சேர்ந்த சியோடோனிம் ஜியோஜுன் (pseudonym Xiaojun) என்பவர் அவரை பெரிய பணக்காரன் போல காட்டிக்கொண்டு, 5 பெண்களை ஒரே சமயத்தில் ஏமாற்றியுள்ளார். ஆனால் உண்மையில் சியோடோனிம் ஜியோஜுன் பணக்கார பின்புலத்தில் பிறக்கவில்லை. அவரது தந்தை கட்டுமானத் துறையில் பணிபுரிந்து வந்தவர். அவரது அம்மாவோ குளியல் இல்லத்தில் உதவியாளராக வேலை செய்து வருகிறார்.

வறுமை மற்றும் குடும்ப கஷ்டம் காரணமாக படிப்பை பாதியோடு சியோடோனிம் ஜியோஜுன் விட்டுவிட்டார். ஆனாலும் அவரை பெரிய பணக்காரன் போல காட்டிக்கொண்டு நடித்து, ஒரு பெண்ணை வலையில் வீழ்த்தி அந்த பெண்ணுடன் தொடர்பு ஏற்படுத்திக்கொண்டார்.

அவரிடம் பெரும் பணக்காரன் போல காட்டிக்கொண்டு விலை உயர்ந்த பரிசுப் பொருட்களையும் கொடுத்து வந்தார். அந்த பெண்ணும் முழுவதுமாக நம்பிவிட்டார். ஒரு கட்டத்தில் அந்தப்பெண் கர்ப்பமானார். அதனால் அந்த பெண், சியோடோனிம் ஜியோஜுன்-ஐ திருமணம் செய்துகொண்டார். ஆனால் திருமணத்திற்குப் பின்னர்தான் சியோடோனிம் ஜியோஜுன்-ன் உண்மையான பொருளாதார நிலை அந்த பெண்ணுக்குத் தெரியவந்தது.

அதிர்ச்சியடைந்த அவர், சியோடோனிம் ஜியோஜுன்-உடன் சண்டைபோட்டார். இருப்பினும் என்ன செய்வது ஏமாந்தாயிற்றே. அதனால் சியோடோனிம் ஜியோஜுன்-ஐ விவாகரத்து செய்யாமல், வீட்டை விட்டு விரட்டிவிட்டார். மேலும் பிறக்கும் குழந்தையை அவரே வளர்க்கவும் முடிவு செய்துகொண்டார்.

வீட்டை விட்டு வெளியேற்றிவிட்டால் திருந்திருவேனா..? என்று அசால்ட்டாக சியோடோனிம் ஜியோஜுன் தனது லீலையை மீண்டும் தொடர்ந்தார். ஆன்லைனில் ஒரு பெண்ணுடன் பழகி, அதே பணக்காரன் கதையை சொல்லி நம்பவைத்தார்.

அந்த பெண்ணிடம், வீட்டை கொஞ்சம் சீரமைக்கவேண்டும் என்று கூறி, ரூ.16.50 லட்சம் பணம் வாங்கியுள்ளார். மேலும் தனக்கு கிடைத்த புதிய ஆன்லைன் காதலியை தன்னுடைய கர்ப்பிணி மனைவி இருக்கும் அதே குடியிருப்புக்கு அழைத்துவந்து தங்க வைத்துள்ளார். வீட்டை சீரமைப்பதாக கூறி வாங்கிய அந்த பணத்தை, மேலும் சில பெண்களை கவர்வதற்கு பயன்படுத்திக் கொண்டார்.

மேலும் அதே குடியிருப்பில் வசித்த இரண்டு பல்கலைக்கழக மாணவிகளையும், ஒரு செவிலியரையும் தனது வலைக்குள் வீழ்த்தினார். என்னப்பா..இவன் கன்னி ராசிக்காரனோ..? என்று நம்ம ஆளுங்க பேசி இருப்பாங்க. அப்படி விழ வைத்து, அவர்களிடம் ரூ.1.7 லட்சம், ரூ.1.18 லட்சம், 94 ஆயிரம் என வசூல்வேட்டை நடத்தினார்.

எவ்ளோ நாட்களுக்குத்தான் ஏமாற்றிவிட முடியும்? பலநாள் திருடன் ஒருநாள் மாட்டித்தானே ஆகணும். ஒரு கட்டத்திற்குப் பிறகு, அந்த ரெண்டு பல்கலைக்கழக மாணவிகளும் அந்த நர்ஸ் பொண்ணும் அவர்கள் கொடுத்த பணத்தை திரும்பக்கேட்கத் தொடங்கினர். அதில் ஒரு பெண் தந்தே ஆகணும் என்று கேட்டபோது, அந்த பெண்ணுக்கு கள்ள நோட்டுகளை கொடுத்துவிட்டார். இதைக் கண்டுபிடித்த அந்தப் பெண், காவல்துறையில் புகாரளித்தார்.

மாட்டிக்கொண்டான் மார்த்தாண்டன்..

காவல்துறை நடத்திய விசாரணையில் திடுக் சம்பவங்கள் வெளியானதால் காவல்துறையே அசந்துபோனது. டேய் ..நாங்கெல்லாம் ஒண்ணு வச்சியே சமாளிக்க முடியலியே..நீ எப்பிடிடா..அஞ்ச வச்சி சமாளிச்ச..?அதுவும் ஒரே அபார்ட்மெண்டில்.. என்று அதிர்ச்சி அடைந்தனர்.

சியோடோனிம் ஜியோஜுன் ஒரே குடியிருப்பில் ஒரு மனைவி மற்றும் நான்கு காதலிகளுடன் கடந்த நான்கு வருடங்களாக வாழ்ந்து வந்தது தெரியவந்தது. இதில் ஆச்சரியம் என்னவென்றால் அவரது மனைவியும், முதல் காதலியும் ஒரே கட்டிடத்தில் இருந்துள்ளனர்.

அவர்கள் இருவரும் தங்கள் குழந்தைகளை வாக்கிங் கூட ஒன்றாக அழைத்து சென்று பழகியுள்ளனர். ஆனால் இருவருக்கும் இருப்பது ஒரே கணவர்தான் என்பதை அவர்களால் கண்டுபிடிக்கவே முடியவில்லை.

சியோடோனிம் ஜியோஜுன்-க்கு நீதிமன்றம் 9.5 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் 14 லட்சம் ரூபாய் அபராதம் விதித்துள்ளது. மேலும், பாதிக்கப்பட்ட பெண்களுக்கு இழந்த பணத்தை திரும்பக் கொடுக்கவும் உத்தரவிட்டுள்ளது. போலீசே மிரண்டு போயுள்ளனராம்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top