இந்த தேர்தலில் டிரம்ப் வெற்றி பெற்றுள்ள நிலையில்.. உலக அரசியலில் என்ன நடக்கும்?
- இஸ்ரேலுக்கு அமெரிக்காவின் உதவிகள் கண்டிப்பாக அதிகரிக்கும். இஸ்ரேல் காசா போரை முடிக்க அழுத்தம் கொடுக்கும். நான் அதிபராகும் முன், காசாவில் நடக்கும் போரை முடித்து விடுங்கள். அதுவரை காத்திருக்க வேண்டாம். கதை முடித்து விடுங்கள் என்று இஸ்ரேலிடம் சொன்னவரும் இதே டொனால்ட் டிரம்ப் தான்
- காசா போர் முடியும் வாய்ப்புகள் ஏற்படும். அதாவது ஜெருசலேமை இஸ்ரேல் தலைநகராக அறிவித்ததும் இதே டிரம்ப் தான். .
- இவர் ஆட்சிக்கு வந்தால் 3ம் உலகப்போர் போன்ற நிகழ்வுகள் நடக்கும் என்று உலக நாடுகள் கருதுகின்றன. ஆனால் டிரம்ப் ‘போரை நிறுத்துவேனே தவிர போர் நடத்த மாட்டேன்’ என்று முற்றுபுள்ளி வைத்து விட்டார்
- டாலர் வர்த்தகத்தை மேற்கொள்ளாத நாடுகள் மீது நடவடிக்கை எடுக்க வாய்ப்புகள் உள்ளன. பல நாடுகள் டாலர் வர்த்தகத்தில் இருந்து வெளியேறும் நிலையில் அதை டிரம்ப் தடுக்கலாம்.
- சீனாவை சேர்ந்த சாட்ல் டைபூன் என்று அழைக்கப்படும் சீன ஹேக்கிங் குழு, டிரம்ப்- வான்ஸ் பிரசார குழுவில் உள்ள இரண்டு ஊழியர்களின் தொலைபேசி பேச்சுக்களை ஹேக்கிங் செய்து எதிரிகளுக்கு தெரிவித்துள்ளனர். இதனால் சீனா மீது கடும் கோபத்தில் டிரம்ப் இருப்பார் என வல்லுநர்கள் சொல்லுவது உண்மையே.
- தெற்கு சீனா கடலோர பிரச்சனைகள் மீண்டும் ஏற்படும். இதனால் நிலைமை மோசமாகலாம். டிரம்ப் காலத்தில் தான் இங்கே பதற்றம் அதிகரித்தது. சொல்ல போனால் சீனாவின் தைவான் அபகரிப்பு திட்டம் பனால்?
- இவர் சீனாவிற்கு கடும் எதிரி என்பதால் இந்தியாவுடன் கூடுதல் நெருக்கம் காட்டும் வாய்ப்புகள் அதிகம் உள்ளன. இதனால் இந்தியாவிற்கு சாதகமான சர்வதேச அரசியல் சூழல் உருவாகும். முக்கியமாக மோடியுடன் இவருக்கு உள்ள நட்பு மிக வலுவடையும்
- டிரம்ப் ரஷ்யாவிற்கு கொஞ்சம் நெருக்கம் என்பதால்.. ரஷ்யாவுடன் கொஞ்சம் நட்பாக செல்லும் வாய்ப்புகள் உள்ளன. இதனால் மாட்டி முழிக்க போவது உக்ரைன் அதிபர் என்று இப்போதே சொல்லி விடலாம்.
- இஸ்ரேலுக்கு நேரடியாக இவர் தரும் ஆதரவால் ஈரானுக்கு சிக்கல் ஏற்படும். முக்கியமாக ஈரானின் அணு ஆயுத திட்டங்களுக்கு சிக்கல் ஏற்படும். ஈரான் மீதான தாக்குதலில் அடக்கி வாசித்த இஸ்ரேல் இனி ட்ரம்ப் இருக்கிற தைரியத்தினால் ஆக்ரோசமாக ஈரானை நையப்புடைக்க இருக்கிறது.
- டிரம்ப் பாகிஸ்தானுக்கு எதிரான மனநிலை கொண்டவர். பாகிஸ்தானுக்கு கடனோ, உதவியோ செய்ய மாட்டேன் என்று வெளிப்படையாக கூறியவர், இந்தியாவின் நியாயத்தை புரிந்தவர். இனி பாகிஸ்தான் நிலைமை கடும் சிக்கலை சந்திக்கும்.
- கனடா விவகாரங்களிலும் தலையீடு இருக்க சந்தர்ப்பம் இருந்தாலும் மோடியின் மீதுள்ள நல்ல அபிப்ராயத்தால் ட்ரம்பின் அணுகுமுறை இந்தியாவுக்கு எதிராக இருக்காது.
- ஹமாஸ், ஹிஸ்புல்லா போன்ற தீவிரவாத இயக்கங்கள் படுமோசமான நிலைக்கு தள்ளப்படும். ஒரு சிங்கம் படுத்தும் பாடே தாங்க முடியவில்லை. இனி இரண்டு சிங்கமும் சேர்ந்து வேட்டையாடும்.
- கனடா பிரதமர் டுருடோ, வங்கதேச பிரதமர் யூனுஸ் இவர்கள் எல்லாம் மிக குறுகிய காலத்தில் செயல் இழப்பார்கள் என்று உலகியல் நிலவரத்தை சொல்லும் நிபுணர்கள் கணித்துள்ளனர்.