வைகை அணையிலிருந்து பாசனத்திற்காக நாளை முதல் தண்ணீர் திறக்க அரசு ஆணையிட்டுள்ளது.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், வைகை பூர்வீக பாசனப் பகுதி 3-க்கு 10.11.2024 முதல் 18.11.2024 வரை 9 நாட்களுக்கு 1830 மி.க.அடியும்,
வைகை பூர்வீக பாசனப் பகுதி-1க்கு 20.11.2024 முதல் 29.11.2024 வரை பத்து நாட்களுக்கு 418 மி.க.அடியும்,
வைகை பூர்வீக பாசனப் பகுதி 2-க்கு 01.12.2024 முதல் 08.12.2024 வரை 8 நாட்களுக்கு 752 மி.கஅடியும் 3000 அடிக்கு மிகாமல் தண்ணீர் திறக்கப்படவுள்ளது. இதனால் 27529 ஏக்கர். 40743 ஏக்கர் மற்றும் 67837 ஏக்கர் பாசனம் பெறும்.
மேலும் மார்ச் 2025 வரை வைகை அணையில் வைகை பங்கீட்டு நீர் 1354 மி.க.அடி எட்டும் போதெல்லாம் வைகை பூர்வீக பாசனப் பகுதி 1, 2 மற்றும் 3க்கு தண்ணீர் திறப்பு விதிகளின்படி 2:3:7 என்ற விகிதாச்சார அடிப்படையில் வைகை அணையிலிருந்து தண்ணீர் திறந்துவிட அரசு ஆணையிட்டுள்ளது.
இதன் மூலம் மதுரை. இராமநாதபுரம் மற்றும் சிவகங்கை மாவட்டங்களிலுள்ள வைகை பூர்வீக பாசனப் பகுதி கொண்ட நிலங்கள் பாசன வசதி பெறும்.
இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.