Close
நவம்பர் 14, 2024 10:11 மணி

பிரதமர் மோடியை பற்றி இப்படி விமர்சித்தது சரியா?

பிரதமர் மோடி

இந்திய நாட்டின் பிரதமரை தரக்குறைவாக விமர்சிப்பவர்களை கட்டுக்குள் கொண்டு வர என்ன தான் வழி.

நாட்டின் உயரிய தலைமை பொறுப்பில் இருக்கும் தலைவர்களுக்கு வழங்கப்பட வேண்டிய மரியாதையில் மிகுந்த கடுமை காட்டும் சட்டங்களை கொண்டவை இந்தியா தவிர்த்த பிற நாடுகள்.

குறிப்பாக அரபு நாடுகளில் அந்த விதிகள் மிக மிக கடுமையானவை. விமர்சனம் செய்ய முடியாது. கார்ட்டூன் படங்களை பத்திரிகைகளில் வெளியிட முடியாது. புனை பெயர்களிட்டு இழிவாக கிண்டல் செய்ய முடியாது. மீறி செய்தால் அதற்கான தண்டனை கடுமையானவை.

ஒரு சின்ன உதாரணம். சில வருடங்களுக்கு முன் தமிழர் ஒருவர் சவூதியில் ஒரு பெட்ரோல் பம்பில் வேலை செய்து வந்தார். ஒரு நாள் திடீரென விசாவை ரத்து செய்து அவரை வீட்டுக்கு அனுப்பி விட்டார்கள்.

காரணம் என்ன என்று பார்த்தால் அட கடவுளே ரகம். பெட்ரோல் பம்பில் வேலை செய்து கொண்டிருக்கும் போது, சும்மா இருந்த நேரத்தில் அந்த நாட்டு பத்திரிகையில் வந்திருந்த அந்நாட்டு இளவரசரின் படத்தில் பாக்கெட்ல இருந்த பேனாவால்  முறுக்கு மீசை வரைந்து தாடி ட்ரிம் பண்ணி கைவரிசையை விளையாட்டாக காட்டி விட்டார்.

இன்பேக்ட் அவருக்கு அந்த மொழியும் தெரியாது, அது அந்த நாட்டு இளவரசர் என்பதும் தெரியாது. படிக்காத பாமரர். அறியாமல் செய்த தவறு அது. பெட்ரோல் போட வந்த ஒருவர் அதைப் பார்த்ததும், போலீசை கூப்பிட்டு ஒப்படைத்து விட்டு சென்று விட்டார்.

உடனே அவர் விசா ரத்து செய்யப்பட்டு, இந்தியா அனுப்பப்பட்டார். அவர் தரப்பு நியாயம் ஏற்றுகொள்ளப் படவில்லை. அறியாமலோ அல்லது தெரியாமலோ செய்தாலும் தவறு தவறுதான் என்ற அடிப்படையில் தண்டனை வழங்கப்பட்டது.

ஏனென்றால் அந்த நாட்டில் தலைவர்களுக்கு வழங்கப்பட வேண்டிய மரியாதை தொடர்பான விஷயத்தில் எந்த சமரசமும் இல்லை என்பது அவர்கள் கோட்பாடு. ஆனால் இந்தியாவை எடுத்து கொண்டால் அது அறவே கிடையாது. குறிப்பாக பிரதமர் மோடியை நிறைய பேர் மனிதராக கூட மதிப்பதில்லை. கிண்டல், ஏளனம் இதற்கெல்லாம் பஞ்சமே கிடையாது.

பாஜகவினருக்கு கூட அந்த அடிப்படை புரிதல் கிடையாது. பாஜகவிற்காக வானத்தை பொளந்து கட்சியை வளர்த்து கொண்டிருப்பதாக நினைத்து கொண்டிருக்கும் சமூக வலைத்தள பிரபலம் ஒருவர் மோடியின் முகத்தை ஜீன்ஸ் மாட்டிய ஒரு சினிமா பட ஹீரோவின் உடம்பில் ஒட்ட வைத்து குத்தாட்டம் ஆடவிட்டிருக்கார்.

அதற்கு ஆயிரத்தில் லைக். நம் பிரதமர் மோடி உலகமே கையெடுத்து கும்பிடும் உன்னத மனிதர். நாட்டின் உயரிய பொறுப்பில் இருப்பவர். மூத்த மனிதர். அவருக்கென்று மரியாதை உண்டு. அதிலிருந்து விலகி விமர்சனமோ இது போன்று கார்ட்டூன் வீடியோக்களோ வெளியிடுவது மிகப்பெரிய தவறு.

அது நல்ல கருத்தின் பொருட்டு செய்யப்பட்டாலும், ஊரே போற்றும் பெரிய மனிதரை இப்படி குத்தாட்டம் ஆட விடுவது நல்லாவா இருக்கு. அந்த உடம்பில் உங்கள் தந்தை முகத்தை ஒட்ட வைத்து இப்படி ஆடவிட்டால் ஒத்துக் கொள்வீர்களா?

என்ன பைத்தியக்காரத்தனம் இது ? லைக்கிற்காக இவ்வளவு கீழிறங்க வேண்டுமா? இதனால் கட்சி எத்தனை அடி வளரும்? எறும்பு கரையான்னு பேக் ஐடியை வைத்து கொண்டு கண்ட கண்ட மூன்றாம் தர வார்த்தைகளில், கள்ள உறவையும், படுக்கை அறை செயல்களையும் தொடர்பு படுத்தி போடும் போடப்படும் கமெண்ட்களால் கட்சி எவ்வளவு வளர்ந்தது என்று யாராவது சொன்னால் நல்லது.

இதை ரசிக்கவும் ஒரு பெரிய கூட்டம் தயாராக இருக்கிறது. மோடி அரசின் சாதனைகளை எவ்வளவு மாய்ந்து மாய்ந்து எழுதினாலும் அதை சீண்டி கூட பார்ப்பதில்லை பலர். இது போன்ற கேடு கெட்ட கமெண்ட் என்றால் லைக் குவியும். இதை சொன்னால் காவி என்று சொல்லி கொள்ளும் சிலர் பைத்தியம் போல பிதற்றுகிறார்கள். ஏன் சொல்கிறோம் என்ற அடிப்படை அறிவு கூட இல்லை.

நன்றி: நல்லினி

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top