Close
நவம்பர் 24, 2024 2:59 காலை

மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் : மாவட்ட ஆட்சியர் வழங்கினார்..!

மாற்றுத்திறனாளிகளின் புகார் மனுக்களை நேரில் பெற்றுக்கொண்ட காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர்.

காஞ்சிபுரத்தில் மாற்றுத்திறனாளி பயனாளிகளுக்கு ரூ.2.86 இலட்சம் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி வழங்கினார்.

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாக மக்கள் நல்லுறவு மைய கூட்டரங்கில் நடைபெற்ற வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் இன்று மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி தலைமையில் நடைபெற்றது.

மாவட்ட ஆட்சியரகத்தில் உள்ள மக்கள் நல்லுறவு மையத்தில் பிரதி திங்கட்கிழமை தோறும் பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டு, அம்மனுக்கள் சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு வழங்கி தீர்வு காணப்பட்டு வருகிறது.

இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் தலைமை வகித்து பொதுமக்களிடம் இருந்து 348 மனுக்களை பெற்று அவற்றின் மீது உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள அனைத்து துறை அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்கள்.

இன்று  நடைபெற்ற  வாராந்திர மக்கள்  குறைதீர்க்கும்  நாள்  கூட்டத்தில், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில், இயற்கை மரணம் அடைந்த 16 மாற்றுத்திறனாளிகளின் குடும்பத்திற்கு ரூ.2,72,000/- மதிப்பிலான ஈமச்சடங்கிற்கான நிதியுதவி காசோலைகளையும், 6 மாற்றுத்திறனாளிகளின் வாரிசுதாரர்களுக்கு ரூ.14,000/- மதிப்பிலான கல்வி உதவித்தொகைக்கான காசோலைகளையும் மற்றும் 1 மாற்றுத்திறனாளி பயனாளிக்கு ரூ.500/- மதிப்பிலான மூக்கு கண்ணாடியையும் என ரூ.2,86,500/- மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்கள்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் வெங்கடேஷ், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ஆர்த்தி, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் மலர்விழி மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top