Close
நவம்பர் 14, 2024 5:07 மணி

சேலம் மாவட்டத்தில் வேலைவாய்ப்பு: விண்ணப்பங்கள் வரவேற்பு

சேலம் மாவட்டத்தில் பண்ணை சாரா மாவட்ட வள பயிற்றுநர் தேர்விற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் பிருந்தாதேவி தெரிவித்ததாவது:

தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், சேலம் மாவட்டத்தில் பண்ணை சாராத் தொழில்கள் மேம்படுத்தப்பட்டு வருகிறது. மேலும், மேலாண்மை இயக்குநர், சென்னை அவர்களின் அறிவுரையின்படி, ஒரு மாவட்ட வள பயிற்றுநர் (பண்ணை சாராத தொழில்கள்) பணியிடத்திற்கு எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முக தேர்வு மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

தேர்வு செய்யப்படும் மாவட்ட வளபயிற்றுநருக்கு கல்வித் தகுதி ஒரு பட்டப்படிப்பு (ஊரக வளர்ச்சி/சமூகப்பணி/விற்பனை மேலாண்மை (Regular)) முடித்திருக்க வேண்டும்.

முதுகலை விற்பனை நிர்வாக படிப்பு (Business Administration in Supply Chain Management) ஏற்புடையுது. அனுபவம் குறைந்தபட்சம் இரண்டாண்டுகள் அனுபவம் முதல் அதிகபட்சம் 10 ஆண்டுகள் வரை இதே பணியில் பணி அனுபவமும், தமிழ் மற்றும் ஆங்கிலம் எழுத, படிக்க மற்றும் பேசுவதில் சிறப்புடையவராக (திட்ட செயல்பாடு ஊரக பகுதிகளில் இருப்பதாலும் மத்திய, மாநில அளவிலான திட்டங்களை செயல்படுத்த வேண்டியிருப்பதாலும்) இருத்தல் வேண்டும்.

பயிற்சியாளர், சமூகப்பணியாளர், வாழ்வாதாரத் திட்ட அனுபவம் இருத்தல் வேண்டும். தகவல் தொழில் நுட்ப அறிவு கணினி அறிவு பெற்றவராக இருக்க வேண்டும் (Word,Excel&Etc).

தேர்ந்தெடுக்கப்படும் மாவட்ட வள பயிற்றுநர் ஒப்பந்த அடிப்படையில் (Contract Basis) ஒரு வருடத்திற்கு மட்டும் நியமனம் செய்யப்படுவர்.

விண்ணப்பங்களை நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ இணை இயக்குநர் /திட்ட இயக்குநர், மாவட்ட இயக்க மேலாண்மை அலகு, அறை எண்:207, மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம், சேலம் -636001 6160TM முகவரியில் 18.11.2024 மாலை 5.00 மணிக்குள் சமர்பிக்க வேண்டும்.

இவ்வாறு ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top