Close
நவம்பர் 15, 2024 1:19 காலை

முதல்வருக்கு சவால்.. துணை முதல்வர் பதில்.. யார் முதல்வர்? – ஆர்.பி.உதயக்குமார் 

மதுரை மாவட்டம், உசிலம்பட்டி தனியார் மண்டபத்தில் அதிமுக உசிலம்பட்டி ஒன்றிய அளவிலான செயல்வீரர்கள் கூட்டம் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில், பேசிய முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார், மூன்று ஆண்டுகளில் திமுக அரசு 234 தொகுதிக்கும், மக்களுக்கும் என்ன திட்டங்களை கொடுத்தீர்கள் என விவாதம் செய்ய முதல்வருக்கு எதிர்கட்சி தலைவர் சவால் விட்டால், ஒன்று முதலமைச்சர் அந்த சவாலை ஏற்றுக்கொள்ள வேண்டும் அல்லது சவாலை மறுக்க வேண்டும். ஆனால் அந்த சவாலுக்கு உதயநிதி ஸ்டாலின் நான் வருகிறேன் என சொல்கிறார்.
எல்லா அரசு திட்டத்திற்கும் கலைஞர் பெயரை சூட்டுவது நியாயமா, மதுரையில் ஜல்லிக்கட்டு மைதானம் கலைஞர் பெயரில் அமைக்கப்பட்டது. அங்கு எங்கு ஜல்லிக்கட்டு நடக்கிறது.

ஜல்லிக்கட்டு என்றால் மண்ணின் மைந்தர்கள் ஒன்று கூட எங்கள் ஊர் அலங்காநல்லூரில் நடத்துகிற ஜல்லிக்கட்டு, அந்த வாடிவாசல் என்றால் உலகம் முழுவதும் பிரசித்தி பெற்றது.

ஆனால் நீங்கள் நடத்துவது மல்லிக்கட்டு; அதனால் அது வீணாகிப் போன திட்டம், அதைத்தான் மக்கள் வரிப்பணத்தை இப்படி வாரி இறைத்து கலைஞர் பெயரை சூட்டுவது நியாயமா என எடப்பாடி பழனிச்சாமி கேட்டார்.

திமுக கட்சி செய்யும் அட்டூழியத்திற்கு வேறு எந்த கட்சியும் வாய் திறப்பதில்லை. ஒரு நாள் இந்த ஊடகங்கள் திமுகவிற்கு எதிராக திரும்பினால் அந்த நிமிடமே திமுக ஆட்சி கவிழ்ந்து விடும் என எடப்பாடி பழனிச்சாமி கூறினார்.
100 நாள் வேலை திட்டத்திற்கு கூட சம்பளம் போட முடியாத நிலையில் திமுகவின் ஆட்சி இருக்கிறது என அவர் பேசினார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top