விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ மனை மற்றும் மருத்துவக் கல்லூரியில் டாக்டர்களின் புறக்கணிப்பு போராட்டம் நடைபெற்றது.
சென்னையில் உள்ள கிண்டி கலைஞர் நூற்றாண்டு பல்நோக்கு மருத்துவ மனையில் புற்றுநோய் துறை பேராசிரியர் பாலாஜி மீது கொடுரத் தாக்குதல் நடத்தப்பட்டது.
அதனை கண்டித்து விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்கம் மற்றும் இந்திய மருத்துவ சங்கம் இணைந்து நேற்று தமிழகம் முழுவதும் புறநோயாளிகள் பிரிவு மற்றும் அவசரமில்லா அறுவை சிகிச்சை ஆகியவை புறக்கணிப்பு போராட்டம் நடத்தினர்.
இதில் மருத்துவமனை பாதுகாப்பு சட்டத்தினை வலுப்படுத்த வேண்டியும், குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை கொடுக்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தியும் போராட்டம் நடைப்பெற்றது. அதனைதொடர்ந்து நேற்று விழுப்புரம் அரசு மருத்துவ கல்லூரியிலும் போராட்டம் நடைபெற்றது.
இந்த போராட்டத்தில் இந்திய மருத்துமாநில நர்ஸிங் ஹோம் போர்டு பொருளாளர் திருமாவளவன், விழுப்புரம் மாவட்ட தலைவர் தங்கராஜ், செயலாளர் சௌந்தர்ராஜன், சிவக்குமார், பஷீர் அஹமது மற்றும் தமிழ்நாடு அரசு மருத்துவ சங்கத்தின் விழுப்புரம் தலைவர் சம்பத், செயலாளர் வினோத், பொருளாளர் பிரகாஷ் மற்ற அரசு மருத்துவர்கள், பட்டமேற்படிப்பு மருத்துவ மாணவர்கள், செவிலியர்கள் என சுமார் 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.