Close
நவம்பர் 15, 2024 8:35 காலை

பங்களாதேஷில் மீண்டும் ஆட்சி மாற்றத்திற்கு வாய்ப்பு..!

வங்காளதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா-கோப்பு படம்

எதிர்பார்த்தது போலவே பங்ளாதேஷ் உள்நாட்டு அரசியல் தலைமை மாற்றத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது.

அமெரிக்க அதிபராக ட்ரம்ப் வெற்றி பெற்றதுமே ஜியோ பாலிட்டிகல் வல்லுநர்களால் கணிக்கப்பட்ட மிக முக்கிய விஷயம். பங்களாதேஷில் மீண்டும் பிரதமராக ஷேக் ஹசீனா வருவார் என்பது தான். ஆனால் அதற்கான பிள்ளையார் சுழி இவ்வளவு சீக்கிரமாக போடப்படும் என்பது எதிர்பாராத ஒன்று.

ட்ரம்ப் வெற்றி பெற்றதும் முதல் முதலாக வாழ்த்து செய்தி அனுப்பியது பங்ளாதேஷ் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா தான். அதுமட்டுமல்ல அன்றே அரை மணி நேரத்திற்கும் அதிகமாக ட்ரம்புடன் தொலைபேசியில் பேசியது தற்போதைய இடைக்கால பிரதமர் யூனுஸ் ஆதரவாளர்கள் வயிற்றில் புளியை கரைக்க தொடங்கியது.

எதிர்பார்த்தது போலவே தற்போதைய இடைக்கால பிரதமர் யூனுஸ்க்கு எதிராக மிகப்பெரிய அளவில் போராட்டம் பங்களாதேஷில் வெடித்துள்ளது. நிச்சயம் இது தலைமை மாற்றத்தில் போய்தான் முடியும் என்பது எல்லோரும் அறிந்ததே.

பங்களாதேஷில் ஆட்சி மாற்றம் என்பது எதிர்பார்க்கப்பட்ட ஒன்று என்றாலும் இத்தனை விரைவில் அதற்கான முஸ்தீபுகள் உருவாகும் என்பது  யூனுஸ்க்கு எதிர்பாராத அதிர்ச்சியாக மாறி உள்ளது.

இதற்கெல்லாம் காரணம் யார் என்று பார்த்தால் பாரதமும், ராஜதந்திரி மோடியுமே. பங்களாதேஷில் இந்துக்கள் தாக்கப்பட்டபோது எல்லா நாடுகளும் கை கட்டி வேடிக்கை தான் பார்த்தனரே தவிர யாரும் வாய் திறந்து பங்களாதேஷை கண்டிக்கவில்லை.

பாரத பிரதமரும் சரி, அவர் அமைச்சர்களும் சரி,  எவ்வித கருத்தும் சொல்லாதது பாரத இந்துக்கள் மட்டுமல்ல பங்களாதேஷ் இந்துகளுக்கும் ஏமாற்றத்தை கொடுத்தது. ஆனால் ஒரு பிரச்சனை நடக்கும் போது பாரதம் அமைதி காக்கிறது என்றால் அந்த பிரச்சனைக்கு சூத்திரதாரிகளுக்கு பேராபத்து காத்திருக்கிறது என்று அர்த்தம். ராஜதந்திரத்தில் வல்லமை பெற்றவர்கள் நம் பாரத ஆட்சியாளர்கள்.

பிரதமர்  மோடி பங்களாதேஷ்க்கு எதிராக எதிர் வினையாற்றவில்லை, ஆனால் பிரதமர் மோடி என் நண்பன் என்று சொல்லி கொள்ளும் ட்ரம்ப் கடுமையாக கண்டித்தார். அவருடைய அன்றைய கண்டனம் யூனுஸ் அரசாங்கத்திற்கு விடப்பட்ட எச்சரிக்கை.

ஆனால் அவர்கள் ட்ரம்ப் வெற்றி பெறுவார் என்று துளியும் நம்பவில்லை. கமலாவே வெற்றி பெறுவார் என்று உறுதியாக நம்பியதால் ட்ரம்ப்ன் எச்சரிக்கையை ஒரு பொருட்டாகவே எடுத்துக் கொள்ளவில்லை. திக்கற்றவர்களுக்கு தெய்வமே துணை என்பார்கள். அதன்படி பங்களாதேஷ் இந்துக்களின் அபய குரலுக்கு தெய்வமே இறங்கி வந்து நீதி வழங்கியுள்ளது.

ட்ரம்ப் வெற்றியும், அவரை பின்னிருந்து இயக்கிய பிரதமர் மோடியும் இன்று பங்களாதேஷ் இந்துக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் நடவடிக்கையில் இறங்கியுள்ளனர்.

விரைவில் ஆட்சி மாற்றம் வரும், ஷேக் ஹசீனா மீண்டும் பிரதமராவார். யூனுஸ் நிலைமைதான் பரிதாபம். அமெரிக்காவிலிருந்து இறக்குமதியான யூனுஸ் மீண்டும் அமெரிக்கா பக்கம் தலை வைத்து கூட படுக்க முடியாத அளவிற்கு சிக்கலில் சிக்கியுள்ளார்.

தெய்வம் நின்று கொல்லும் என்பது இதுதான். ஹசீனாவிற்காவது அடைக்கலம் கொடுக்க ஒரு பாரதம் இருந்தது, யூனுஸ் நிலைமைதான் பரிதாபமாகிவிட்டது. மொத்தத்தில் வலது சாரி அரசியல் ஒட்டு மொத்த உலகத்தையும் புரட்டி போட தயாராகிவிட்டது என்பதற்கான தொடக்கம் இது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top