Close
நவம்பர் 18, 2024 8:37 காலை

6 மணி நேரத்தில் 98 கோடி ஓட்டுகள்: அமெரிக்காவை அதிர வைத்த இந்தியா

16 கோடி ஓட்டுக்களை எண்ணுவதற்கு அமெரிக்கா இரண்டு நாட்கள் எடுத்துள்ள நிலையில், இந்தியா 98 கோடி ஓட்டுக்களை 6 மணி நேரத்தில் எண்ணி சொல்லி விடுகிறது.

நாங்கள் வல்லரசு என்று பீத்தி கொண்டிருக்கும் அமெரிக்காவில் தேர்தல் நடைமுறைகள் பற்றி நாம்  அறிய வேண்டும்.  அமெரிக்காவில் உள்ள 50 மாநிலங்களில் 28 மாநிலங்களில் வாக்காளர் அடையாள அட்டை மட்டுமல்லாமல் வேறு எந்த வித ஐடியும் இன்றி அமெரிக்க அதிபர் தேர்தலில் ஓட்டு போட முடியும்.

இன்னொரு 14 மாநிலங்களில் புகைப்பட அடையாள அட்டை இல்லை என்றாலும் ஏதாவது ஒரு ஆவணத்தை காட்டி ஓட்டு போடலாம்.

9 மாநிலங்களில் மட்டும் வாக்களிக்க புகைப்பட ஐடி இருந்தால் மட்டுமே வாக்களிக்க முடியும் என்கிற கட்டுப்பாடுகள் இருக்கிறது.

இது அங்கே உள்ள அரசியல் அமைப்பு சட்டமாம். எவ்வளவு கேவலமான சட்டம். எந்த வித அடையாள அட்டையும் இன்றி அமெரிக்க அதிபர் தேர்தலில் வாக்களிக்கும் முறை உள்ள 28 மாநிலங்களில் வெற்றி பெற்று இருப்பது யார் தெரியுமா? கமலா ஹாரிஸ் தான்.

இவர்கள் ஆளும் கட்சி என்பதால் அதிகாரத்தை பயன்படுத்தி கள்ள ஓட்டு போட்டு 28 மாநிலங்களில் ஜெயித்து விட்டார்கள். எங்கெல்லாம்  வாக்காளர் / அடையாள அட்டை தேவையோ, அங்கெல்லாம் கமலா ஹாரீஸ் மண்ணைக் கவ்வியிருக்கிறார்.

டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்ற மாநிலங்களில் ஒட்டர்ஸ் ஐடி அல்லது ஏதாவது ஓரு அடையாள அட்டை இருந்தால் மட்டுமே ஓட்டு போட முடியும். ஆக டிரம்ப் தான் உண்மையாக மக்களின் ஆதரவுடன் வெற்றி பெற்று இருக்கிறார்.

இன்னொரு விஷயம் மிக முக்கியமானது. உலக வல்லரசு நாட்டின் அவலம் இப்படி இருக்கிறது. ஆனால் அமெரிக்க அதிபர் தேர்தலில் அதிக பட்சமாக 16.2 கோடி வாக்குகள் தான் பதிவாகி இருக்கிறது. ஆனால் இதனை எண்ணி முடிக்க 2 நாள் வரை ஆகிறது.

இந்தியாவில் நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் பதிவான வாக்குகள் 98 கோடி. இருந்தாலும் ஒரே நாளில் சரியாக சொல்ல வேண்டும்  என்றால் 6 மணி நேரத்தில் அனைத்து வாக்குகளும் எண்ணப்பட்டு, இந்தியாவின் 543 தொகுதிகளின் முடிவுகள் அறிவிக்கப்பட்டு விட்டது. இந்தியாவின் இந்த தேர்தல் நடைமுறையும், தொழில்நுட்பமும், அமெரிக்கா உட்பட உலகை அதிர வைத்துள்ளது.

உலகின் வல்லரசு நாடு என்று வாய் கிழிய பேசும் அமெரிக்கா இன்று வரை அதனுடைய அதிபர் தேர்தலை நடத்தக்கூட வாக்காளர் அடையாள அட்டை கூட வழங்க முடியாமல் தேர்தல் நடத்தி வருகிறது. ஆனால் இது கூட புரியாமல் இந்தியாவில் உள்ள சிலர் அமெரிக்காவில் தேர்தல் வாக்கு சீட்டு முறையில் நடைபெறுகிறது. அதனால் அங்கே ஜனநாயகம் இருக்கிறது. ஆனால் இந்தியாவில் ஏன் EVM மிஷின் பயன் படுத்துகிறார்கள். இது தவறான செயல் அல்லவா என்று மக்களை ஏமாற்றி வருகின்றனர்.

மேலும் தேர்தலில் தோல்வி அடையும் பொழுது EVM மிஷினை குறை சொல்லுவதும் வெற்றி பெற்றால் வாய் மூடி அமைதியாக இருப்பதும் இங்குள்ள கட்சிகளுக்கு கை வந்த கலையும் கூட. இந்தியாவில் தேர்தல் வாக்கு சீட்டு முறையை கொண்டு வந்தால் இங்குள்ள சிலரை தோற்கடிக்க எவராலும் முடியாது என்பதே உண்மை.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top