காஞ்சிபுரம் பாலாற்றில் முடவன் முழுக்கு சிவ பூஜை வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது..பாலாற்றில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று மணலில் சிவலிங்கம் வடிவமைத்து சிவ பூஜை செய்து வழிபட்டனர்..
12 ராசிகளில் துலா ராசிக்குரிய மாதமாக விளங்குவது ஐப்பசி மாதம். இந்த மாதத்தில் நதிகளில் நீராடினால் பாவங்களை நீக்கி புண்ணியம் பெறலாம் என்பது ஐதீகம்.
அவ்வகையில் கடந்த காலங்களில் ராமேஸ்வரத்தில் ஒரு முடவன் இருந்த நிலையில் ஐப்பசி மாத துலா ஸ்தானம் செய்து முக்தி அடைய வேண்டும் என எண்ணி காவிரியை நோக்கி பிரயாணம் செய்தார்.
முடவன் என்பதால் குறிப்பிட்ட கால நிலையில் அவரால் அடைய முடியாத நிலையில், மயிலாடுதுறையில் உள்ள ஸ்ரீ மயூரநாதர் திருக்கோயில் அடைந்து திருக்கோயிலில் மனம் உருகி வேண்டியுள்ள நிலையில், உடனடியாக காவிரியில் போய் குளித்து வேண்டுதல் செய் என அசரீதியாக கூறிய வார்த்தைகளால் காவிரியில் குளித்து நீராடிய நிலையில் சுவாமியும் அம்பாளும் ரிஷப ரூடராக தோன்றி, ஊனக் குறையை நீக்கி அருள் செய்துள்ளனர். அன்று முதல் இன்று வரை இந்நாளை முடவன் முழுக்கு திருநாள் என கூறி வழிபட்டு வருகின்றனர்.
அவ்வகையில் காஞ்சிபுரம் ஸ்ரீ திருஞானசம்பந்தர் இறை பணி மற்றும் உழவாரப்பணி அறக்கட்டளை சார்பில், காஞ்சிபுரம் பாலாற்றில் மணலில் லிங்கம் வடிவமைக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் மேற்கொள்ளப்பட்டது.
முன்னதாக கோபூஜை, அஸ்வ பூஜை தொடங்கி கன்னி பூஜை என சிறப்பு பூஜைகள் மேற்கொள்ளப்பட்டது. மேலும் திருச் செங்காட்டன்குடி சோமாஸ்கந்தர் அலங்காரத்தில் எழுந்தருளிய சிவனுக்கு சிறப்பு தீபாராதனைகள் காண்பிக்கப்பட்டு, பக்தர்களுக்கு விபூதி பிரசாதம் அளிக்கப்பட்டது.
மேலும் பல்வேறு பக்தர்கள் பாலாற்றில் நீராடி பாராற்று மணலில் சிவலிங்கம் வடிவமைத்து குடும்பத்துடன் பூஜைகள் மேற்கொண்டு இறையருள் பெற்றனர்.கலந்து கொண்ட அனைத்து பக்தர்களுக்கும் விழா குழு சார்பில் பிரசாதங்கள் வழங்கப்பட்டது.