Close
நவம்பர் 18, 2024 4:16 காலை

2025ம் ஆண்டு ஐபிஎல் ஏலத்தில் குட்டி வீரர்..! 13 வயசுதானாம்..!

வைபவ் சூர்யவன்ஷி

2023ம் ஆண்டு ஐபிஎல் போட்டிகளுக்கான வீரர்கள் ஏல நிகழ்வு சவூதி அரேபியாவின் ஜெட்டா நகரில் இம்மாதம்( நவம்பர்) 24 மற்றும் 25 தேதிகளில் நடக்கவுள்ளது. இந்த ஏலத்தில் வெறும் 13 வயதே ஆன குட்டி வீரரும் பங்கேற்கிறார் என்பது தான் ஹை லைட்டான விஷயம். இது குறித்த செய்தியினை விரிவாக பார்க்கலாம் வாங்க.

204 வீரர்களை தேர்வு செய்யும் மெகா ஏல நிகழ்ச்சியை மல்லிகா சாகர்தான் இந்த முறையும் தொகுத்து வழங்க இருக்கிறார்.

574 வீரர்கள் என்ற மொத்த எண்ணிக்கையில் இருந்து பேரில் இருந்து 70 வெளிநாட்டு வீரர்கள் உட்பட 204 வீரர்கள் ஏலம் எடுக்கப்பட உள்ளனர். இறுதி வீரர்கள் பட்டியலில் 13 வயதான இளம் வீரரான வைபவ் சூர்யவன்ஷி பெயரும் இடம்பெற உள்ளதாக தெரியவந்துள்ளது.

2011ம் ஆண்டு மார்ச் 27ம் தேதி வைபவ் பிறந்துள்ளார். இடதுகை ஆட்டக்காரரான வைபவ், பீகார் மாநிலத்தைச் சேர்ந்தவர். வைபவ் சூர்யவன்ஷிதான் ஐபிஎல் வரலாற்றில் மிக இளம் வயதில் ஏலத்தில் பங்கேற்கும் வீரர் ஆவார். அவரது பெயர் பட்டியலில் 68வது செட்டில் 491வது இடத்தில் உள்ளார். அன்கேப்ட் வீரராக வகைப்படுத்தப்பட்டுள்ள வைபவுக்கு அடிப்படை ஏலத் தொகை 30 லட்சம் ரூபாயாக நிர்ணயிக்கபம் செய்யப்பட்டுள்ளது.

வைபவ், தனது கிரிக்கெட் பயணத்தை 9 வயதில் தொடங்கினார்.
அடுத்தாண்டு ஐபிஎல் போட்டிகளில் விளையாட உள்ள வீரர்களுக்கான ஏலத்தில் இடம்பெற்றுள்ள 13 வயது சிறுவன் வைபவ் சூர்யவன்ஷி மிகக் குறைந்த வயதுள்ள கிரிக்கெட் வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.

204 வீரர்களை தேர்வு செய்ய ஜெட்டா நகரில் நடக்க உள்ளது மெகா ஏலம். இந்த ஏல நிகழ்ச்சியை மல்லிகா சாகர் இந்தாண்டும் தொகுத்து வழங்க இருக்கிறார். 574 பேரில் இருந்து 70 வெளிநாட்டு வீரர்கள் உட்பட 204 வீரர்கள் ஏலத்தில் எடுக்கப்பட இருக்கின்றனர். வீரர்கள் பட்டியலில் 13 வயதான இளம் வீரரான வைபவ் சூர்யவன்ஷியின் பெயரும் இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

2011 ஆம் ஆண்டு மார்ச் 27 ஆம் தேதி பிறந்தவர் வைபவ். இடதுகை ஆட்டக்காரரான வைபவ், பிகாரைச் சேர்ந்தவர். வைபவ் சூர்யவன்ஷியை பொறுத்தவரை, ஐபிஎல் ஏல வரலாற்றில் பங்கேற்கும் மிக இளம் வயது வீரர் ஆவார். பட்டியலில் 68வது செட்டில் 491வது இடத்தை பிடித்துள்ளார். அன்கேப்ட் வீரராக வகைப்படுத்தப்பட்டுள்ள இவருக்கு அடிப்படை தொகை 30 லட்சம் ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

பீகாரின் தாஜ்பூர் கிராமத்தில் 2011- ஆம் ஆண்டு மார்ச் 27 ஆம் தேதி பிறந்த வைபவ், தனது கிரிக்கெட் பயணத்தை 9 வயதில் தொடங்கினார்.

கிரிக்கெட் மீதான ஆர்வம் அவரது தந்தையிடமிருந்து வந்ததாக தெரிகிறது.அவரது தந்தையே தொடக்க காலத்தில் வைபவுக்கு பயிற்சி அளித்துள்ளார். பின்னர் தலைநகர் பாட்னாவுக்குச் சென்று முறையான பயிற்சிகளை தொடங்கினார்.

வைபவ், முதலில் 12 வயது சிறுவனாக பீகார் U19 போட்டிக்கான வினு மங்கட் டிராபியில் விளையாடினார். இடது கை பேட்ஸ்மேனான வைபவின் நிதானமான முதிர்ச்சியான ஆட்டத்தால் கடந்த ஜனவரியில் மும்பைக்கு எதிராக நடந்த ரஞ்சி டிராபியில் பீகார் அணிக்காக விளையாடும் வாய்ப்பை பெற்றார்.இதன் மூலம், முதல்தர விளையாட்டில் மிக குறைந்த வயதில் அறிமுகம் ஆன வீரர்கள் என்ற அலிமுதீன், யுவராஜ் சிங் ஆகியோரின் சாதனையை முறியடித்தார்.

பின்னர், கடந்த செப்டம்பர் மாதம், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான U19 டெஸ்ட் தொடரில் இந்திய அணிக்காக அறிமுகமானார். தனது முதல் சர்வதேச போட்டியில் வெறும் 58 பந்துகளில் சதம் அடித்து சாத்தித்தார். அதில் 14 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்களுடன் 104 ரன்களில் அவுட் ஆனார்.

U19 கிரிக்கெட் வரலாற்றில் 2005ம் ஆண்டில் மொயீன் அலி 56 பந்துகளில் அடித்த சதத்துக்கு பிறகு பதிவான இரண்டாவது அதிவேக சதம் இதுவாகும்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top