கோவையில் வரும் நவம்பர் 30 மற்றும் டிசம்பர் 1 ஆகிய இரண்டு நாட்கள் “Arise Awake Assert” எனும் கருத்தரங்கம் நடக்கிறது.
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தலைமையில் நடக்கும் இந்த மாநாட்டில் பாரதம் முழுக்க இருந்து பெரும் சிந்தனையாளர்கள் கலந்து கொள்கின்றார்கள். காசி, மதுரா என பல இடங்களில் இருந்து சனாதன மற்றும் பாரத தேசாபிமான சிந்தனை கொண்ட பலர் வருகின்றார்கள்.
தமிழகத்தில் இருந்து எச்.ராஜா, அர்ஜூன் சம்பத், கோலாகல சீனிவாஸ் என பல முக்கிய சிந்தனையாளர்கள் கலந்து கொண்டு பேசுகின்றார்கள், முக்கியமாக மிக சிறந்த சிந்தனைகளை, யாரையும் யோசிக்க வைக்கும் கருத்துக்களை, சனாதானத்தின் மறுக்க முடியா ஆதாரங்களை முன் வைக்கும் Jayasree Saranathan கலந்து கொள்கின்றார்கள்.
அர்ஜூன்மூர்த்தி முதல் பல பெரும் அறிஞர்கள், சிந்தனையாளர்கள் உரையாற்றுகின்றார்கள். இது அறிவியல், சமூகம், அரசியல், ஊடகம், சட்டம், ஆன்மீகம், வாழ்வியல், கல்வி, மனவியல், இந்து குடும்பவியல் என எல்லா பக்கமும் பாரத சிந்தனையின் அடிப்படையினை அவசியத்தை சொல்லும் கருத்தரங்கம் என்பதால் ஒவ்வொரு துறையில் இருந்தும் ஆகசிறந்தவர்கள் அழைக்கபட்டிருக்கின்றார்கள்.
இங்கே எல்லா மதத்தவரும் உண்டு. எல்லா இனத்தவரும் உண்டு. இது பாரத சிந்தனையினை பாரத தாத்பரியத்தை மக்களிடம் சொல்லும் அரங்கம். மிக சிறந்த முயற்சி இது. நிச்சயம் இது அரசியல் அல்ல. மாறாக இந்த தேசத்தின் தாத்பரியம் என்ன?, எப்படியெல்லாம் கடந்த 300 ஆண்டுகளாக இங்கு மாய பிம்பங்கள் கட்டமைக்கப்பட்டிருக்கின்றன, ஏன் இந்துக்கள் மழுங்கடிக்கப்பட்டார்கள், ஏன் இந்தியா குழப்பமான தேசமாக மாற்றப்பட்டது?
இதிலிருந்து மீளும் வழி என்ன? இந்த நாட்டினுள் விதைக்கப்பட்ட ஆபத்து என்ன? அதன் மருந்து என்ன? என்பதையெல்லாம் விளக்கும் கருத்தரங்கம் இது. கோவை கொடீசியா அரங்கில் இது பிரமாண்டமாக நடக்கின்றது.
இந்த மகா அவசியமான, அத்தியாவசிய தேவையான கருத்தரங்கத்தினை ஏற்பாடு செய்திருப்பவர்கள் “வாய்ஸ் ஆப் கோவை” எனும் அமைப்பினர்.
இது முழுக்க தேசாபிமான அமைப்பு, முன்பு அண்ணாமலை கோவையில் போட்டியிட்ட போது அது அவருக்காய் பணியாற்றிற்று, பின் அது இம்மாதிரி தேசாபிமான காரியங்களை முன்னெடுக்கின்றது. அந்த அமைப்பின் செயலாலர் சுதர்சன் இப்போது அடுத்த முயற்சி.
தேசத்தின் வரலாறு என்ன? இங்கு நடந்த பெரும் அநீதி என்ன? இந்துக்களும் மக்களும் அறியமையில் உழன்று உறங்கி கொண்டிருகின்றார்கள், இவர்களை எழுப்பி வலிமையான பாரத்தை உருவாக்குவது எப்படி என்பதை சொல்லும் அரங்கம் இது. இது “கோவையின் குரல்” மட்டுமல்ல இது தேசத்துக்கு அவசியமான குரல், தேசத்தின் குரல்.
இப்படியான பெரு நிகழ்ச்சிகள் கோவையில் மட்டுமல்ல, மாகாணம் முழுக்க எல்லா மாவட்டங்களிலும் எல்லா ஊர்களிலும் நடத்தபட வேண்டியது அவசியம். இது அரசியல் அல்ல, இது தேர்தலுக்கான கூட்டம் அல்ல, இது முழுக்க முழுக்க உறங்க வைக்கபட்ட மக்களை எழுப்பும் முயற்சி.
“விழிமின், எழுமின், உழைமின்” என சுவாமி விவேகானந்தர் சொன்ன அந்த அழைப்பின் படி ஒவ்வொருவரையும் தட்டி எழுப்பும் பெரும் முயற்சி. “”விழித்திரு, எழுந்திரு, உறுதியோடு இரு” என்ற இந்த அழைப்பு பெருவெற்றி பெற வாழ்த்துவோம். அழைக்கப்பட்டோர் அனைவரும் ஆக சிறந்த சிந்தனையாளர்கள், அங்கே விவாதிக்கபோகும் கருத்துக்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொருவரும் அறியவேண்டியவை.
இதனால் கோவை வாசிகள் மட்டுமல்ல, கொங்கு மண்டலமே சென்று அங்கு பங்குபெற்று பலனடையட்டும், இம்மாதிரி நிகழ்வுகள் மாகாணமெங்கும் பெருகட்டும்.