Close
நவம்பர் 18, 2024 9:28 காலை

ஆப்பிரிக்க, தென் அமெரிக்க நாடுகளில் இந்தியா ஆதிக்கம்..!

நைஜீரிய அதிபர் டினுபுவுடன் பிரதமர் மோடி

பாரத பிரதமர் மோடி ஒருவார கால அரசுமுறை பயணமாக ஆப்ரிக்காவின் நைஜீரியா, தென் அமெரிக்காவின் பிரேசில் மற்றும் கயானா ஆகிய நாடுகளுக்கு சென்றுள்ளார்.

முதற்கட்டமாக அவர் நேற்று நைஜீரிய தலைநகர் அபுஜாவினை சென்றடைந்தார். நைஜீரிய அதிபர் போலோ அகமது மோடியினை வரவேற்று, இது வரலாற்று சிறப்புமிக்க தருணம் என்றார்.

நைஜீரியா மேற்கு ஆப்ரிக்க நாடு. எண்ணெய் வளம் அதிகம். அங்கே கிறிஸ்தவரும் இஸ்லாமியரும் பாதிக்கு பாதி என்றாலும் இஸ்லாமிய ஆதிக்கம் அதிகமுள்ள நாடு. அந்த நாட்டுக்கு சுமார் 17 ஆண்டுகள் கழித்து பாரத பிரதமர் செல்வது இதுவே முதல்முறை.

நைஜீரியாவுக்கு பல வகையில் இந்தியா தேவை. கோவிட் காலகட்டத்தில் இந்தியா மருந்து அனுப்பியது முதல் உறவுகள் வலுப்பட்டன‌. இப்போது இந்தியாவின் தேஜஸ் விமானம் மற்றும் இதர பாதுகாப்பு தளவாடங்களை அந்நாடு இந்தியாவில் இருந்து வாங்க விரும்புகின்றது. ரஷ்யா உக்ரைன் போரில் சிக்கிய நேரம், இந்த சந்தையினை சீனா கைபற்ற நினைத்தது. ஆனால் மோடியின் இந்தியா அதை தட்டிபறித்து விட்டது.

மோடியின் நைஜீரிய பயணம் ஆப்ரிக்காவில் இனி இந்திய ஆதிக்கத்திற்கு வழிவகுக்கும். பாதுகாப்பு கருவிகள் மற்றும் இதர‌ உற்பத்திகளின் ஆதிக்கம் பெருகும். இந்தியாவுக்கு ஆப்ரிக்காவில் பெரும் சந்தை திறக்கப்படும் என்பதை தெரிவிக்கின்றது.

உக்ரைன் போரில் புட்டின் வசமாக சிக்கிக் கொண்ட நேரம் இது. ஆப்ரிக்காவில் தாதுக்கள் அதிக யுரேனியம் முதல் தங்கம் வைரம் இன்னும் அரியவகை உலோகங்கள் அதிகம் உள்ளன. இதை விட அறியாமையும் முரட்டுதனமும் முன்கோபமும் மக்களிடம் மிக, மிக அதிகம்.

இதை பயன்படுத்தி வல்லரசுகள் அங்கே குழப்பம் விளைவித்து கலங்கிய குட்டையில் மீன்பிடித்து வந்தன. ரஷ்யா அதில் முக்கியமான நாடாக இருந்தது. அதன் வாக்னர் குரூப் இதைத்தான் செய்தது. அதையும் உக்ரேனுக்கு திருப்பி இழந்து விட்ட நிலையில் இனி ரஷ்யாவின் சொந்த ஆயுத தயாரிப்புக்கே காலமெடுக்கும் நிலையில் ஆப்ரிக்காவில் ஒரு சமநிலை தவறுகின்றது.

ரஷ்யா வெளியேறிய அந்த இடைவெளியில் சீனா நுழைய பார்க்க வசமாக மோடி அடித்து ஆடி அந்த இடத்தை கைப்பற்றி விட்டார். ஆப்ரிக்காவின் வலுவான அரசுகளில் நைஜிரியா ஒன்று என்பதால் இந்தியாவுக்கு இது சாதகம். இனி இந்திய ஏற்றுமதி அங்கே பெருகும். அதை கண்டு பல நாடுகள் இந்தியா பின்னால் வரும்.

இது இந்தியாவுக்கு ஐ.நா அவையிலும் பலம் பெற்றுத்தரும். பின் மோடி பிரேசிலுக்கு செல்கின்றார் அங்கு நவம்பர் 17, 18ல் நடக்கும் ஜி20 மாநாட்டில் கலந்து கொள்கின்றார். அங்கே அமெரிக்க நடப்பு அதிபர் பிடன், சீன அதிபர் ஜின்பெங் எல்லோரும் கலந்து கொள்கின்றார்கள்.

முன்பு ரஷ்யாவில் பிரிக்ஸ் மாநாடு நடக்கும் போது செல்ல அஞ்சி எனக்கு காய்ச்சல் என மருத்துவ சான்றிதழை மாஸ்கோவுக்கு அனுப்பிய லூலா இப்போது முதல் ஆளாக நிற்கின்றார். இது புட்டீனுக்கு கடுப்பை ஏற்படுத்தலாம்.  பிரிக்ஸ் மாநாட்டை முடித்து விட்டு கயானா நாட்டுக்கு செல்கின்றார் மோடி. கயானா எனும் பெரும் நாடு கொலம்பஸ் அங்கே படையெடுத்தபின் வந்த காலங்களில் ஐரோப்பிய கைக்கு சென்றது.

அது பிரிட்டிஷ் கயானா, டச்சு கயானா, பிரெஞ்சு கயானா என மூன்று நாடுகளானது. அங்கே இப்போது பிரிட்டிஷ் கயனாவுக்கு மோடி செல்கின்றார். இங்கெல்லாம் இந்திய வம்சாவளி உண்டு. அங்கு முன்பு இந்திய வம்சாவழி நாகமுத்து பிரதராக இருந்தது குறிப்பிடத்தக்கது.

50 ஆண்டுக்குபின் கயானா செல்லும் முதல் இந்திய பிரதமர் என்பதால் அவரை ஆவலுடன் எதிர்பார்ப்பதாக கயானா அதிபர் இர்பான் அலி தெரிவித்துள்ளார், 19ம் தேதி மோடி கயானாவின் ஜார்ஜ் டவுன் செல்கின்றார்.

அங்கே கரீபிய கூட்டமைப்பு என்றொரு அமைப்பு உண்டு, கரிகாம் எனும் அந்த நாடுகளின் கூட்டமைப்பில் மோடி கலந்து கொள்கின்றார். கவனியுங்கள் நேருவின் அணிசேரா கொள்கையினை தூக்கி எறிந்ததில் இருந்து இந்தியா எவ்வளவு அமைப்பில் பங்கு பெறுகின்றது என்றால் இப்படித்தான். கரீபியன் கூட்டமைப்பும் மோடியினை சிறப்பு விருந்தினராக அழைக்கின்றது.

அங்கும் மோடி உரையாற்றுகின்றார். ஒரு நாட்டின் உச்சநிலை தலைவரின் பயணம் எப்போதும் அரசியல், பொருளாதாரம் உள்ளிட்ட வலிமைகளை சொல்லும். அவ்வகையில் மோடியின் இப்பயணம் ஆப்பிரிக்கா, தென் அமெரிக்கா, கரீபியன் ஆகிய பிரதேசங்களில் இந்திய ஆதிக்கத்தை சொல்கின்றன‌. ஒரு விஷயம் உங்களுக்கு நினைவுக்கு வரலாம்

இதே கயனாவின் அருகில் இருக்கும் நாடு பிரெஞ்சு கயானா. முன்பெல்லாம் இந்தியாவின் எடைமிகுந்த செயற்கை கோள்கள் இங்கிருந்து தான் வான்வெளிக்கு ஏவப்படும்.

காரணம் இந்தியாவின் குலசேகரபட்டினம் போன்ற கடற்கரை அது. இன்னொன்று இந்தியாவிடம் எடை மிக்க செயற்கைகோள்களை சுமக்கும் கிரையோஜெனிக் சிஸ்டம் அன்று இல்லை, ஜி.எஸ்.எல்.வி இல்லை.

இப்போது நாமே இங்கு அவ்வகை ராக்கெட்டுகளை தயாரித்து நமது ஸ்ரீஹரிகோட்டா என இங்கிருந்தே ஏவுகின்றோம், சந்திராயன் வரை நம்மால் ஏவ முடிகின்றது. இனி குலசேகரபட்டணத்தில் இருந்தும் ஏவலாம். பிரெஞ்சு கயனாவின் இடத்தை இந்தியாவின் தென் பக்கம் இப்போது இழுத்து கொண்டது. மோடி அரசு அச்சாதனையினை செய்கின்றது.

ஆக உலகெல்லாம் இந்திய கொடியினை பறக்கவிட்டு, ஐரோப்பிய நாடுகளை பின்னுக்கு தள்ளி பெரும் தொழில் வாய்ப்பை, நன்மதிப்பை, இந்திய திருநாட்டின் பெரும் மாண்பை, அது கண்டிருக்கும் முன்னேற்றத்தை, பலத்தை, விஞ்ஞானத்தை உலகுக்கு சொல்ல சென்றிருக்கும் மோடிக்கு தேசம் தன் வாழ்த்துகளை சொல்கின்றது. அவர் செல்லுமிடமெல்லாம் பாரத கொடி உயர பறக்கட்டும். புதிய இந்தியாவின் புதுபலத்தை புத்தொளியினை உலகம் காணட்டும்.

“உலகெங்கும் யாவும் உன் அரசாங்கமே, ஒவ்வொன்றும் நீ செய்யும் அதிகாரமே”.  வந்தே மாதரம், ஜெய்ஹிந்த்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top