தமிழக பள்ளிக்கல்வித்துறையின் வழிகாட்டுதலின்படி , தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு பள்ளிகளிலும் எங்கள் பள்ளி மிளிரும் பள்ளி எனும் சுற்றுச்சூழல் சார்ந்த திட்டம் கடந்த ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது.
அனைத்து அரசு தொடக்கப் பள்ளிகள், நடுநிலைப் பள்ளிகள் , உயர்நிலைப் பள்ளிகள் மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவ , மாணவியருக்கு, பள்ளி வளாக தூய்மை , திடக்கழிவு மேலாண்மை, நெகிழி பயன்பாட்டை குறைத்தல், இயற்கைக்கு உகந்த பொருட்களை பயன்படுத்துதல் , பள்ளிகளில் காய்கறி மற்றும் மூலிகை தோட்டங்கள் அமைத்தல், பள்ளியின் சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு மற்றும் பொறுப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் இத்திட்டம் செயல்பட்டு வருகிறது.
அவ்வகையில் , காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகளில் சிறப்பாக செயல்படுத்திக் கொண்டிருக்கும் சிறந்த சுற்றுச்சூழல் களப்பணிகள் ஆற்றிய மாணவ, மாணவியர்கள் , ஆசிரியர்கள், பள்ளிகள் மற்றும் அரசு பள்ளிகளுடன் இணைந்து செயலாற்றிய தன்னார்வ தொண்டு நிறுவனங்களுக்கு மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி பாராட்டு சான்றிதழ் மற்றும் கேடயம் வழங்கி வாழ்த்துக்களை தெரிவித்தார்.
உள்ளிட்ட , ஆறு பள்ளி மாணவர்கள், மூன்று ஆசிரியர்கள், மூன்று பள்ளிகள் மற்றும் பசுமை ஆர்வலர்களான சரண் மேகநாதன் மற்றும் ரோட்டரி கிளப் நிர்வாகி உள்ளிட்ட 15 நபர்களுக்கு பாராட்டு சான்றிதழ் மற்றும் கேடயங்கள் வழங்கப்பட்டது.
இந்நிகழ்வில் காஞ்சிபுரம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் வெற்றிச்செல்வி, மாவட்ட வருவாய் அலுவலர் வெங்கடேஷ் உள்ளிட்டோர் பலர் கலந்து கொண்டனர்