தமிழர் விடுதலைக் கட்சி சார்பில் முப்பெரும் விழா காஞ்சிபுரத்தில் நடைபெற்றது.
வ.உ.சி யின் 88 ஆம் ஆண்டு நினைவு நாள், தமிழர் விடுதலைக் கட்சியின் இரண்டாம் ஆண்டு தொடக்க நாள் மற்றும் தமிழ் பெயர் பலகை விழிப்புணர்வு பேரணி என முப்பெரும் விழா காஞ்சிபுரத்தில் நடைபெற்றது.
தமிழர் விடுதலைக் கட்சியின் மாநில தலைவர் யாளி மேகநாதன் தலைமையில், அக்கட்சியினர் கங்கைகொண்டான் மண்டபத்தில் இருந்து புறப்பட்டு மேற்கு ராஜவீதி , அன்னை இந்திரா காந்தி சாலை, பேருந்து நிலையம், காமராஜர் தெரு , மூங்கில் மண்டபம், காந்தி சாலை வழியாக தேரடி வரை தமிழ் பெயர் பலகை விழிப்புணர்வு பேரணி நடத்தினர்.
இப்பேரணியில் தமிழ் பெயர் பலகைகளை வணிக நிறுவனங்கள் வைக்க வேண்டும் எனவும் , தமிழில் 30 விழுக்காடும் , ஆங்கிலத்தில் முப்பது விழுக்காடும் , பிற மொழிகளில் 20 வழக்காடு என அரசு கூறிய விதிகளை பின்பற்ன கூறி முழக்கங்கள் இட்டவாறு சென்றனர்.
இதனைத் தொடர்ந்து தேரடியில் தமிழர் விடுதலைக் கட்சியின் இரண்டாம் ஆண்டு தொடக்க விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் தமிழில் விடுதலைக் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.