Close
நவம்பர் 18, 2024 5:34 மணி

காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவில்: சாஸ்திரி ஆக்கிரமித்த வீடு மீட்பு

ஆக்கிரமிப்பாளரிடம் இருந்து மீட்கப்பட்ட காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவிலுக்கு சொந்தமான வீடு.

பல ஆண்டுகளாக வாடகை தராமல் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்த காஞ்சி காமாட்சி அம்மன் கோவிலுக்கு சொந்தமான 55லட்சம் ரூபாய் மதிப்பிலான வீட்டை ஆக்கிரமிப்பில் இருந்து அதிரடியாக  இந்து சமய அறநிலைய துறை அதிகாரிகள் மீட்டு உள்ளனர்.

காவல்துறை பாதுகாப்புடன்  வீ்ட்டில் இருந்த பொருட்களை லாரியில் ஏற்றி வீட்டை காலி செய்து அனுப்பினர்.

காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவிலுக்கு சொந்தமான வீடு ஒன்று மேற்கு மாட வீதி பகுதியில் இருந்து வருகிறது.

சுமார் 55 லட்சம் மதிப்பில் உள்ள இந்த வீட்டை, காமாட்சி அம்மன் கோவிலில் பணிபுரிந்த ராமச்சந்திர சாஸ்திரி என்பவர் வாடகைக்கு எடுத்து குடியிருந்து வந்துள்ளார்.

இந்த நிலையில் ராமச்சந்திர சாஸ்திரி குடியிருந்த வீட்டுக்கு கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக வாடகை செலுத்தாமல் ஆக்கிரமிப்பு செய்து வந்தார்.

இது குறித்து கோவில் நிர்வாகம் மற்றும் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் பலமுறை நோட்டீஸ் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளாமல் இருந்து வந்தார்.

இந்நிலையில் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் ராமச்சந்திர சாஸ்திரி மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து ஆக்கிரமிப்பு செய்துள்ள வீட்டை காலி செய்வதற்கான ஆணையை பெற்றனர்.

இதனைத் தொடர்ந்து இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் கார்த்திகேயன் தலைமையில் காமாட்சி அம்மன் கோவில் செயல் அலுவலர் சீனிவாசன், மேலாளர் பத்ரி நாராயணன் மற்றும் பல்வேறு திருக்கோவில்களின் செயல் அலுவலர்கள் கோவில் ஆய்வாளர்கள் மற்றும் கோவில் பணியாளர்களுடன் ஆக்கிரமிப்பு செய்துள்ள வீட்டிற்கு வந்தனர்.

பின்பு போலீசார் பாதுகாப்புடன் ஆக்கிரமிப்பு செய்திருந்த வீட்டை அதிரடியாக கோவில் பணியாளர்கள் உதவியுடன் காலி செய்து பொருட்களை லாரியில் ஏற்றி அனுப்பி வைத்தனர்.

பின்னர் ஆக்கிரமிப்பில் இருந்து மீட்ட வீட்டை பூட்டி சீல் வைத்து அறிவிப்பு பலகையினை நட்டு வைத்து விட்டு சென்றனர்.

இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் அதிரடியாக நடவடிக்கை மேற்கொண்ட சம்பவம் காரணமாக காமாட்சி அம்மன் கோவில் சுற்றுவட்டார பகுதிகளில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top