Close
நவம்பர் 18, 2024 5:48 மணி

புற்றுநோயாளிக்கு நேர்ந்த சோகம் .. மிரட்டலால் ரோட்டிலே தஞ்சம்

சேலம் காடையாம்பட்டி எலத்தூர் பகுதியை சேர்ந்தவர் ரவி கூலித்தொழிலாளி. இவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.  இவர் தனது மனைவி மற்றும் மகளுடன் வந்து சேலம் மாவட்ட எஸ்பி அலுவலகத்தில் மனு அளித்தார்.

மனுவில், அவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும், தனக்கு ஒரு மகன் இரு மகள்கள் உள்ளனர். அனைவருக்கும் திருமணமாகி விட்டது. என்மீது இரக்கம் கொண்டு எங்கள் பகுதியை சேர்ந்த ஒருவர் தனது அனுபவத்தில் உள்ள புறம்போக்கு நிலத்தில் குடிசை போட்டு குடியிருந்துகொள்ள அனுமதித்தார்.

அதன்படி குடிசை அமைத்து கடந்த 5 ஆண்டுகளாக நானும் எனது மனைவியும் குடியிருந்து வருகிறோம். இந்நிலையில் அதே பகுதியை சேர்ந்த சிலர் அந்த வீட்டினை அபகரிக்கும் நோக்கத்துடன் வந்து எங்களை வீட்டை விட்டு காலி செய்யுமாறு கொலை மிரட்டல் விடுக்கின்றனர்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு வீட்டில் இருந்து பொருட்களை வெளியில் போட்டுவிட்டு வீட்டை பூட்டிவிட்டனர். தற்போது வீடின்றி ரோட்டிலேயே தங்கி உள்ளோம். எனவே இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் கூறியுள்ளார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top