Close
ஜனவரி 28, 2025 11:50 மணி

அமெரிக்காவிடம் சீனா சரணடைந்ததன் ரகசியம்!

அமெரிக்காவில் டிரம்ப் அடுத்த அதிபராவதை அடுத்து அவர் சீனா மேல் இரும்பு கரம் கொண்டு பாய்வார். இதனால் சீனா, மெல்ல மெல்ல அமெரிக்காவிடம் சரண் அடைகின்றது. சீனாவுக்கு இதெல்லாம் சாதாரணம். சர்வதேச அரசியலில் பலம் வாய்ந்தவர்களிடம் சரணடைவது சீனாவிற்கு இது ஒன்றும் புதியதில்லை.

ஆசியா பசிபிக் ஒத்துழைப்பு மாநாட்டில் நடப்பு அமெரிக்க அதிபர் ஜோ பைடனுடன், சீன அதிபர் ஜின்பிங் சந்தித்தார். அப்போது புதிய அமெரிக்க தலைமையுடன் இணக்கமாக சென்று ஆரோக்கியமான சீனாவினை உருவாக்குவதே தங்கள் நோக்கம் என்றும் உறுதியளித்தார். அமெரிக்க அதிபர் பைடனுக்கு இது சர்வதேச அரங்கில் கடைசி கூட்டம். இத்தோடு அவர் விடைபெறுவார்.

டிரம்ப் இதை கவனித்து “சும்மா விடமாட்டேன்” என தனக்குள் சொல்லிக் கொண்டிருக்கின்றார். சீனாவின் மீது உள்ள வன்மத்தால் கருவிக்கொண்டிருக்கிறார்.

இந்நிலையில் அடுத்து பிரேசிலில் நடக்கும் ஜி20 மாநாட்டுக்கு ஜி ஜின்பிங் சென்று நிரம்ப கவலையோடு அமர்ந்திருந்தார். காரணம் பாரத பிரதமர் மோடி மிகப்பெரிய வரவேற்புடன் அங்கே கால் வைக்கின்றார், முன்னதாக நைஜிரியாவில் மோடிக்கு அந்நாட்டின் இரண்டாம் மிகப்பெரிய விருதான ” Grand Commander of the Order of the Niger”  எனும் விருது வழங்கப்பட்டிருக்கின்றது.

முதல்நிலை விருது நைஜீரியருக்கு என்பது அந்நாட்டு விதி.  அதனால் வெளிநாட்டவருக்கு வழங்கப்படும் மாபெரும் விருது அவருக்கு வழங்கப்பட்டிருக்கின்றது.

இதன் பொருள் இனி நைஜீரியாவின் நெருக்கமான கூட்டாளி இந்தியா, இந்தியாவின் ஏற்றுமதிகள் நைஜீரியாவுக்கு அனுப்பப்படும். இந்திய தொழில்முனைவோர் அங்கு இனி கால்பதிப்பார்கள். இந்திய தொழில்துறை வளரும். அதே நேரம் நைஜீரியாவும் பலனடையும் என்பதை பறைசாட்டுவதற்காகவே இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.

இனி ஆப்பிரிக்காவில் இந்தியக் கொடி உயரே பறக்கும். இப்படி ஒரு பக்கம் என்றால், இன்னொரு பக்கம் உலகே அதிசயித்து நிற்கும்படி இந்தியா சொந்தமாக ஹைப்பர்சோனிக் ஏவுணையினை செய்திருப்பது என்பது சீனாவின் கிடைத்த மிகப்பெரிய அதிர்ச்சியாகி விட்டது.

சீனா இந்த தொழில்நுட்பத்தை இந்தியா பெறும் என எதிர்பார்க்கவில்லை. மிகப்பெரிய ராணுவம், கப்பல்படை, விமானம், ஏவுகணை செயற்கைகோள் என எல்லா வகையிலும் சீனாவுக்கு சமபலத்துடன் போட்டியிடும் இந்தியா, விமானப்படையில் சீனாவினை விட பலமானதாக கணிக்கப்படும் நிலையில் உள்ளது.

இந்த நிலையில் இந்தியாவுக்கு ஹைப்பர்சோனிக் ஏவுகணை என்பது சவாலாகவே இருந்தது. காரணம் அமெரிக்கா அந்த ஏவுகணையினை ஆய்வு செய்த போதே எப்படியோ தட்டிக் கொண்டு போய் செய்த நாடு சீனா. ரஷ்யாவிடம் இந்த ஏவுகணை பல ஆண்டுகளுக்கு முன்பே, அதாவது அமெரிக்கா தயாரிப்பதற்கு முன்பே இருந்தது. இந்தியா அதை சொந்தமாக செய்ய முடியாது. அப்படி ஒரு தொழில்நுட்பம் இந்தியாவிற்கு கிடைக்க இந்தியாவுக்கு இன்னும் 20 ஆண்டு ஆகலாம் என கணக்கிட்டது சீனா.

ஆனால் அதன் கண்ணில் லாரி லாரியாக மண் அள்ளி போட்டு விட்டனர் இந்திய விஞ்ஞானிகள். முன்பெல்லாம் இந்தியா ஒரு ஏவுகணை சோதனை செய்தாலே பாகிஸ்தான் அலறும். “இது தெற்காசியாவில் அமைதியினை பாதிக்கும், இந்தியாவின் ஆயுத குவியல் எங்களுக்கு ஆபத்து” என அலறும். பின் அமெரிக்கா , சீனா இன்னும் பல அரபு நாடுகள் பாகிஸ்தானுக்கு ஆதரவாக குரல் கொடுக்கும், பின் சீனாவின் பழைய ஏவுகணையினை வாங்கி “இதோ எங்களிடமும் ஏவுகணை உண்டு” என பாகிஸ்தான் மார்தட்டும்.

இப்போது இந்தியா ஹைப்பர்சோனிக் ஏவுகணை சோதித்த நேரம் பாகிஸ்தானிடம் சத்தமே இல்லை. சீனாவிடம் இருந்தும் சத்தமில்லை. அமெரிக்கா அதுபோக்கில் இருக்கின்றது, ரஷ்யாவினை யாரும் சீண்டுவதுமில்லை.

இப்படி பலமான இந்தியாவின் பிரதமராக மோடி தன் முன் கால்வைப்பதை கண்டு மனதுக்குள் கொதிப்பினை அடக்கிக் கொண்டு அமர்ந்திருக்கின்றார் ஜி ஜின்பெங். ஜி20 கூட்டத்தில் மோடியின் உரைக்காக உலகம் காத்திருக்கின்றது. காரணம் பைடனுக்கு இது கடைசி  கூட்டம். சீன அதிபருக்கும் இதுதான் கடைசி இரண்டரை வருடங்கள்.

ஆனால் மோடி இந்திய பிரதமராகவே நீடிப்பார் என் கணிக்கும் உலகநாடுகள் அவரின் உரைக்காக காத்துக் கொண்டிருக்கின்றன‌.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top