Close
டிசம்பர் 3, 2024 5:41 மணி

ஜிபே, போன்பே UPI -க்கு போட்டியாக பஜாஜ்பின் சர்வ் கட்டணமில்லா பணப்பரிமாற்றம்..!

யுபிஐ (UPI) என்று சுருக்கமாக அழைக்கப்படும் யுனிஃபைடு பேமண்ட்ஸ் இன்டர்ஃபேஸ் (Unified Payments Interface) சேவையை கிராம ங்களில் கூட சர்வசாதாரணமாக பயன்படுத்தி வருகின்றனர். இந்தியாவின் டிஜிட்டல் பணப்பரிமாற்றத்தில் யுபிஐ ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது.

குறிப்பாக கூகுள்பே மற்றும் போன்பே போன்ற கட்டணத்துடன் செயல்படுத்தப்படும் யுபிஐ போன்றவைகளை மக்கள் இலகுவாக பயன்படுத்தி வருகின்றனர். அதாவது ஒவ்வொரு பணப்பரிமாற்றத்தின் போதும் தொகைக்கு ஏற்ப கட்டணங்களை அந்த நிறுவனங்கள் வசூலித்துக்கொள்ளும்.

இப்படியான கட்டண யுபிஐ சேவைகளுக்கு மத்தியில் யுபிஐயின் முக்கியத்துவத்தை சரியாக உணர்ந்த பஜாஜ் ஃபின்சர்வ் (Bajaj Finserv) நிறுவனம், டிஜிட்டல் பேமெண்ட்டுகளுக்கான ஜீரோ-சார்ஜ் யுபிஐ பரிவர்த்தனைகளை (Zero Charge UPI Transactions) அறிமுகப்படுத்தி உள்ளது. 

மேலும் யுபிஐ லைட் பேமெண்ட் ஆப்ஸ், யுபிஐ பே இந்தியா சேவை மற்றும் பீம் யுபிஐ (BHIM UPI) ஒருங்கிணைப்புகளையும் செய்து, பஜாஜ் ஃபின்சர்வ் நிறுவனம் மற்ற யுபிஐ ஆப்களுக்கான புதிய போட்டியாளராக உருவெடுத்துள்ளது.

பஜாஜ் ஃபின்சர்வ் அதன் யுபிஐ லைட் பேமெண்ட் ஆப்பின் (Bajaj Finserv UPI Lite App) வழியாக ஒரு முக்கிய நன்மையை வழங்குகிறது. 

அதாவது யுபிஐ லைட் பேமெண்ட் பணப் பரிவர்த்தனைகளுக்கு  எந்தக் கட்டணத்தையும் வசூலிப்பதில்லை. மளிகை சாமான்களை வாங்குதல், மொபைல்  ரீசார்ஜ் செய்தல் அல்லது மின்சார கட்டணம்  செலுத்துதல் போன்ற சிறிய அளவிலான தொகைகளை அடிக்கடி பரிவர்த்தனை செய்யும் பயனர்கள்ளுக்கு, பரிவர்த்தனை கட்டணங்கள் இல்லாததால் அவர்களால் நிறைய சேமிக்க முடியும்.

பஜாஜ் ஃபின்சர்வ் யுபிஐ லைட்டின் மற்ற முக்கிய அம்சங்களை பொறுத்தவரை, இதன் கீழ் குறைந்தபட்ச காத்திருப்பு நேரத்துடன் விரைவான பரிவர்த்தனைகளை செய்ய முடியும். 

அதனால், இது டிஜிட்டல் பணப்பரிவர்த்தனையை மேலும் இலகுவாக்குவதுடன் வசதியையும் மேம்படுத்துகிறது. 

மேலும் இந்த ஆப்பின் இன்டர்பேஸ் ஆனது குறைவான இணைய வசதி உள்ள பகுதிகளில் கூட வேகமான செயல்பாட்டுக்கு அனுமதிக்கிறது. மேலும் பணப்பரிவர்த்தனையை  நாடு முழுவதும் எளிதில் சென்றடையச்செய்கிறது.

பஜாஜ் ஃபின்சர்வின் யுபிஐ லைட் ஆப் ஆனது பீம் யுபிஐ உடன் முழுமையான இணக்கம் பெற்றுள்ளது. 

இதன்கீழ் பயனர்கள் தங்கள் பேங்க் அக்கவுண்ட் மற்றும் ஏற்கனவே உள்ள யுபிஐ ஐடிகளுடன் கனெக்ட் ஆகிக்கொள்ள  முடியும். பயனர்கள் தங்களுக்கு விருப்பமான வங்கிக் கணக்கை இணைக்க முடியும்.

 இது அவர்களின் அனைத்து கட்டணத் தேவைகளுக்குமான ஒரே தளமாக அமையும்.

மேலும் பஜாஜ் ஃபின்சர்வின் யுபிஐ லைட் ஆப்பில் பாதுகாப்புக்கு அதிக முன்னுரிமை தரப்பட்டுள்ளது. மல்டி லேயர் ஆத்தன்டிகேஷன் மற்றும் என்கிரிப்ஷன் உடன், பரிவர்த்தனைகள் இருப்பதால் பணப்பரிமாற்றங்கள் மிகவும் பாதுகாப்பாக மேற்கொள்ளப்படுகின்றன. 

மேலும்  பஜாஜ் ஃபின்சர்வின் யுபிஐ லைட் ஆப், மிகவும் எளிமையான மற்றும் பயனர் பயன்பாட்டுக்கு உகந்த வடிவமைப்புடன் வருகிறது. இந்த ஆப்பின் நேவிகேஷனில் எந்த அசௌகரியமும் இருக்காது

இதேபோல சமீபத்தில் ஜென்வைஸ் (GenWise) நிறுவனமானது மூத்த குடிமக்களுக்கான யுபிஐ தேவைகளை நிவர்த்தி செய்வதற்காக, முற்றிலும் வயதானோர்களுக்காக வடிவமைக்கப்பட்ட யுபிஐ பேமெண்ட்டை அறிமுகப்படுத்தி இருந்தது. ஜென்வைஸ் யுபிஐ ஆனதும் கூட வயதானவர்கள் பயன்படுத்தும்படியான மிகவும் எளிமையான யூஸர் இன்டர்பேஸை கொண்டுள்ளது.

மேலும் ஜென்வைஸ் யுபிஐ ஆனது ஜியோ-ஃபென்சிங் (Geo-fencing), பயோமெட்ரிக் அங்கீகாரம் (Biometric authentication) மற்றும் ஆடியோ அடிப்படையிலான நேவிகேஷன் (Audio-based navigation) போன்ற பாதுகாப்பு அம்சங்களையும் கொண்டுள்ளது. 

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top