Close
டிசம்பர் 3, 2024 5:07 மணி

ரூ.50 லட்சம் கேட்டு தாய், மகள் கடத்தல்: 8 பேர் கைது

சென்னை

தாமிரத்தகடு திருடியவர்கள் கைது

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு காமராஜர் நகரைச் சேர்ந்தவர் அல்தாப் தாசிப்  (36) இவர் தனியார் சீட்டு கம்பெனி உரிமையாளர்.

இவர் சுற்றுவட்டார பகுதிகளில் தீபாவளி சீட்டுப் பணம்  கோடிக்கணக்கில் மோசடி செய்ததாக கைதாகி ஜாமினில் வெளியே வந்துள்ளார். இவரது மனைவி ஆப்ரிக் அப்ரின் பேகம் (32) இவர்களுக்கு 3 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது.

அப்ரின் பேகம் சில மாதங்களாக உத்திரமேரூர் பகுதியில் வசிக்கும் தனது அக்கா வீட்டில் தங்கியுள்ளார். அவ்வப்போது ராணிப்பேட்டை பகுதியில் தனி வீடு பார்ப்பதற்காக அப்ரின் பேகம் வந்து சென்றுள்ளார்.

இவ்வாறு அல்தாப் தாசிப்  குடும்பத்தினர் வெளியிடகளுக்கு செல்லும்போது வாலாஜாவை சேர்ந்த அவரது நண்பரான  வசந்தகுமார் அழைத்துச் செல்வது வழக்கமாம்.

மேலும் வசத்துக்குமாரும் அல்தாப் தாசிப் இடம் சீட்டில் கட்டி சேர்த்துள்ளார். தொழில் மூலமாக அல்தாப் தாசிப்   குடும்பத்தினரிடம் வசந்தகுமார் நன்கு அறிமுகமானவராக இருந்துள்ளார்.

இந்நிலையில். நேற்று முன்தினம் ராணிப்பேட்டையில் வீடு பார்ப்பதற்காக அப்ரின் பேகம் வந்து சிப்காட் பகுதியில் உள்ள ஓட்டலில் தங்கி உள்ளார்.

இதனிடையே நவல்பூர்பகுதியில் உள்ள தனது தாயார் ஹயாத்தீன் பேகத்தை பார்த்துவிட்டு, சென்னை செல்வதாகக் கூறிச் சென்றுள்ளார்.

பின்னர் வசந்தகுமார் உங்களது கணவர் சென்னைக்கு அழைத்து வரக் கூறியிருப்பதாக அப்ரின் பேகத்திடம் தெரிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து  ஹோட்டலில் இருந்து வசந்தகுமார் கார் மூலம் அப்ரின் பேகம் அவரது 3 வயது குழந்தையும் அழைத்துச் சென்றுள்ளார். ஆனால் சென்னை செல்லாமல் வேலூர் மார்க்கமாக கார் செல்வதால் சந்தேகமடைந்த  அப்ரின் பேகம் எங்கு சொல்கிறீர்கள் எனக் கேட்டுள்ளார்.

இதற்கிடையில் சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் வேலூர் அடுத்த பொய்கை பகுதிக்கு சென்ற வசந்தகுமார், அங்கு அவரது நண்பர்களை வரவழைத்து அப்ரின் பேகத்தை கடத்திச் சென்றுள்ளனர்.

இந்நிலையில், நேற்று முன்தினம் நள்ளிரவில் தனது தாயார் ஹயாத்தின் பேகத்திற்கு செல்போன் மூலம் தொடர்பு கொண்ட அப்ரின் பேகம், தன்னை கடத்தியுள்ளதாகவும், ரூ.50 லட்சம் கொடுக்குமாறும் கேட்கின்றனர் என தெரிவித்துள்ளார்.

இது சம்பந்தமாக ஹயாத்தின் பேகம் ராணிப்பேட்டை போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் ராணிப்பேட்டை போலீசார் தேடும் பணியில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் மாந்தாங்கல் பகுதியில் ஹயாத் பேகத்திடம் பணம் வாங்க வந்த இருவரை அங்கு மறைந்திருந்த போலீசார் சுற்றி வளைத்து பிடித்தனர். பின்னர் போலீசார் நடத்திய விசாரணையில் கடத்தல் சம்பவத்தில் பெண் உட்பட 7 பேர் ஈடுபட்டிருப்பது தெரியவந்தது.

இதனைத் தொடர்ந்து மற்றவர்களையும் ராணிப்பேட்டைக்கு வரவழைத்து சுற்றி வளைத்து போலீசார் பிடித்தனர். ஒருவர் மட்டும் தப்பி ஓடினார்.

இதனைத்தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில், வசந்தகுமாருடன் சேர்ந்து  கடத்தல் சம்பவத்தில் ஈடுபட்ட ராணிப்பேட்டை காரையைச் சேர்ந்த  பார்த்திபன்( 35 ), ஏசுதாஸ் (30), ரயில்வே ஸ்டேஷன் ரோடுவை சேர்ந்த கார்த்திக் (34), சரத்குமார் (31), வஉசி நகரைச் சேர்ந்த வினோத் (35), அம்மூர் ரோடு திருவள்ளுவர் நகர் சேர்ந்த  ருத்ரேஸ்வரர் (30), வஉசி நகரைச் சேர்ந்த கோமதி ( 36) ஆகியோர் என தெரியவந்து.

இதனையடுத்து 8 பேரையும் போலீசார் கைது செய்து ராணிப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.  மேலும் அவர்களிடமிருந்து ரூ.5 லட்சம் மற்றும் 2 கார்கள் பறிமுதல் செய்தனர்.

போலீசார் நடத்திய விசாரணையில் வசந்தகுமாரும் சீட்டுக்காக கோடிக்கணக்கில் பணம் வசூல் செய்து அல்தாப் தாசிப்பிடம் கட்டியிருப்பதும், அந்த பணத்தை பலமுறை கேட்டும் காலம் தாழ்த்தி வந்ததால் உடனடியாக பணத்தை பெரும் நோக்கில் தனது நண்பர்களுடன் சேர்ந்து கடத்தல் சம்பவத்தில் ஈடுபட்டிருந்தது தெரியவந்தது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top