Close
நவம்பர் 24, 2024 12:49 மணி

கால் பாதங்களில் இருக்கிறது வாழ்க்கை: தேனிக்கு வந்துள்ள நவீன வசதி…

தேனி நலம் மருத்துவமனையின் புட் கேர் பிரிவு

ஒருவரது கால்களை நன்றாக பராமரித்து வலுவாக வைத்துக் கொண்டாலே அவரது ஆரோக்கியத்தை மேம்படுத்தி வாழ்நாளை எளிதில் நீடிக்க முடியும்.

இது மருத்துவ உண்மை. பொதுவாக சர்க்கரை நோய் பாதித்தவர்களுக்கு உடலின் பல்வேறு உறுப்புகள் பாதிக்கப்படும். அதில் முதலில் சிக்குவது கால்கள் தான். குறிப்பாக பாதங்கள் தான். பாதங்களில் ஏற்படும் பாதிப்பை தடுத்து விட்டால் வாழ்க்கை எளிதாகி விடும். இல்லாவிட்டால் வாழ்க்கை நரகமாகி விடும். கால்கள் பாதிக்கப்பட்ட சர்க்கரை நோயாளியின் குடும்பம் பொருளாதார ரீதியாக பெரும் வீழ்ச்சியை சந்தித்து விடும். அந்த அளவு பாதங்களில் ஏற்படும் பாதிப்பு பெரும் கஷ்டத்தை ஏற்படுத்தி விடும். இதனை தடுக்க மிக, மிக எளிய வழிமுறை உள்ளது. கவனமாக இருப்பது, பாதங்களை பாதுகாப்பாக வைத்துக்கொள்வது, அதற்கு மிகவும் சரியான காலணியை தேர்வு செய்வது மிக மிக முக்கியம்.

தேனி மாவட்டத்தில் சர்க்கரை நோய்க்கு சிகிச்சை அளிக்க மிகவும் சிறந்த நவீன மருத்துவமனை தேனி நலம் மருத்துவமனை. இதன் தலைமை டாக்டர் ராஜ்குமார், எம்.டி., படிப்பினை முடித்த பின் பாதங்களை பராமரிப்பது குறித்து அமெரிக்காவில் சிறப்பு பயிற்சி பெற்றுள்ளார். பாதங்களுக்கான சிறப்பு படிப்பு, பராமரிப்பு குறித்த சிறப்பு பயிற்சியும் பெற்றுள்ளார். இதுவரை 40 ஆயிரம் பாதங்களுக்கு சிகிச்சை அளித்து பாதிக்கப்பட்ட நோயாளிகளை காப்பாற்றி உள்ளார்.

தற்போது வரை சர்க்கரை நோய் உள்ளிட்ட அனைத்து சிகிச்சைகளுக்கும், தேனி நலம் மருத்துவமனையில் சிறப்பு சிகிச்சை வசதிகள், மிக அதிநவீன மருத்துவ உபகரணங்கள் உள்ளன. இப்போது பாதங்களை பராமரிக்க புதிய புட்கர் வசதிகள் கொண்டு வரப்பட்டுள்ளன. இதென்ன புதுமை என கேட்காதீர்கள். இதற்குள் உள்ள விஷயம் அந்த அளவு சிறப்பு வாய்ந்தது.

பொதுவாக சர்க்கரை நோயாளிகளின் நரம்புகள் பாதிப்படையும். பாதங்களில் உணர்ச்சிகள் குறையும். ஒரே பாதத்தில் பல்வேறு அழுத்த மாறுபாடுகள் ஏற்படும். இந்த அழுத்த மாறுபாடுகள் மூலம் நமக்கு தெரியாமலேயே நம் பாதங்கள் சேதமடையும். இதனை கண்டறிந்து விட்டால் சில நுாறு ரூபாய் செலவில் சரிசெய்து விடலாம். கவனிக்காமல் விட்டால், பல லட்சங்களை கொட்டினாலும் பாதங்களை பாதுகாக்க முடியாது. சில நேரங்களில் உயிரை கூட எடுத்து விடும் அபாயம் உருவாகி விடும். அந்த அளவு சிக்கல் வந்து விடும். இந்த நெருக்கடியில் இருந்து சர்க்கரை நோயாளிகள் தங்களை பாதுகாத்துக் கொள்ள ஒரே வழி, தங்களது பாதங்களுக்கு தகுந்த காலணிகளை தேர்வு செய்வது மட்டுமே. இந்த காலணிகளை தேர்வு செய்வது அவ்வளவு சுலபமான விஷயமல்ல.

பாதங்களின் அழுத்தங்களையும், காலின் உள் அமைப்புகளையும் துல்லியமாக ஸ்கேன் செய்து, அதற்கு தகுந்த பாதுகாப்பான மெட்டீரியலில் காலணிகளை உருவாக்க வேண்டும். இந்த வசதி தேனி நலம் மருத்துவமனையில் உருவாக்கப்பட்டுள்ளது. இதனை ஏ.சி.வி., புரொடக்ஸ் அதிபர் ஏ.சந்திரசேகர் தொடங்கி வைத்தார். பாலசங்கா குழும நிர்வாக இயக்குனர் தொழிலதிபர் கதிரேசன், நலம் தலைமை டாக்டர் ராஜ்குமார், வனிதா ராஜ்குமார், டாக்டர் பிரபாகரன், டாக்டர் முகமதுபாஷித், தேனி மேலப்பேட்டை இந்து நாடார் உறவின்முறை ஆட்சி மன்றக்குழு உறுப்பினர் ஜெயராமன் நாடார் உட்பட முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

இந்த நலம் புட்வேர் பிரிவில் ரூ.6 லட்சம் செலவில் பாதங்களை ஸ்கேன் செய்யும் மிக அதிநவீன ஸ்கேனர் அமைக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்கேனர் பாதங்களின் வடிவமைப்பு, உள்பகுதி அழுத்தம் உட்பட அத்தனை விஷயங்களையும் துல்லியமாக ஸ்கேன் செய்து கொடுக்கும். அதற்கு தகுந்த காலணிகளை வடிவமைத்து தயாரித்து வழங்குகின்றனர். இதனை அணிவதன் மூலம் பாதங்களில் ஏற்படும் பாதிப்புகளை முற்றிலும் தடுக்க முடியும். தவிர டாக்டர்களின் தொடர் ஆலோசனை, நம்மைப் பாதி இழப்புகளில் இருந்து பாதுகாத்து, வாழ்நாளை நீடித்து வழங்குவதற்கு பெரும் உதவி செய்யும். நம் குடும்ப பொருளாதாரத்தையும் பாதுகாக்கும். நலம் மருத்துவமனை வசதிகளை செய்து கொடுத்துள்ளது. இதனை பயன்படுத்திக் கொள்வது நம் கைகளில் உள்ளது. கூடுதல் தகவல்களுக்கு, நலம் பாதம் புட்கர் 94421 77440, நலம் ரிசப்சன் 99944 70300 என்ற நம்பரில் தொடர்பு கொள்ளலாம் எனறும் அறிவிக்கப்பட்டு உள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top