Close
நவம்பர் 27, 2024 5:21 காலை

தென்காசி மாவட்ட தவெக கிளை அலுவலகம் திறப்பு

பைல் படம்

தென்காசி மாவட்டம், கடையம் அருகே மேட்டூர் பகுதியில் தமிழக வெற்றிக் கழகத்தின் தென்காசி மாவட்டத்தின் இரண்டாவது அலுவலகம் தொடங்கப்பட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் மற்றும் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் உத்தரவின் பேரில், நெல்லை மாவட்ட தலைவர் சஜி ராஜகோபால், தென்காசி தெற்கு மாவட்ட தலைவர் நியாஸ் முன்னிலையில் இன்று மேட்டூர் பகுதியில் தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது அலுவலகம் தொடங்கப்பட்டுள்ளது.

மேலும் 2026 ஆம் ஆண்டு தமிழக முதல்வராக விஜய் அரியணை ஏற்க வேண்டும் எனவும், உறுப்பினர்கள் சேர்க்கை அதிகரிக்க வேண்டும் எனவும்  திட்டமிட்டுள்ளதாக தெரிவித்தனர்.

இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்திருந்த கடையம் ஒன்றியம் கிரிப்சன்,
தயாள், ஜோசப், டேனியல் கனகராஜ், அம்பை பாலா மற்றும் கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top