Close
நவம்பர் 24, 2024 6:41 காலை

அரசால் தடை செய்யப்பட்ட பொருட்களை வைத்திருந்த 5 கடைக்கு சீல் : உரிமையாளர்கள் கைது..!

தமிழக அரசால் தடை செய்யப்பட்ட போதைப் பொருட்களை வைத்திருந்த கடைக்கு மாநகராட்சி நகர் நல அலுவலர் தலைமையிலான குழுவினர் சீல் வைத்த போது.

தமிழகத்தின் இளைஞர்கள் மற்றும் பள்ளி கல்லூரி மாணவர்களை சீரழிக்கும் போதைப் பொருட்களை கற்றுக் கொடுக்க வேண்டும் என பெற்றோர்கள் சமூக அலுவலர்கள் கோரிவந்த நிலையில் தமிழகம் முதல்வர் காவல்துறை மற்றும் மாநகராட்சிகள் உள்ளிட்ட துறைகளை சேர்ந்தவர்கள் உடனடியாக அவ்வப்போது திடீர் ஆய்வு மேற்கொண்டு  தமிழக அரசால் தடை செய்யப்பட்ட போதைப் பொருட்களை விற்பனை செய்தல் மற்றும் பதுக்கி வைத்தல் கடத்தல் தொடர்பாக விரைந்து நடவடிக்கை எடுத்து கட்டுப்படுத்த வேண்டும் என அறிவுறுத்தினார்.

அவ்வகையில் காஞ்சிபுரம் மாவட்ட காவல் தறையினர் அவர்களது காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் தீவிர கண்காணிப்பு மற்றும் அவ்வப்போது கடைகளில் சோதனை விட்டு அரசன் தடை செய்யப்பட்ட போதை பொருட்களை விற்பனை செய்வது கண்டுபிடிக்கப்பட்டாலும் அல்லது இருப்பு வைத்திருந்தாலோ உடனடியாக அவர்கள் கைது செய்யப்பட்டு அவர்கள் மீது வழக்கு தொடரப்பட்டு வருகிறது

தமிழக அரசால் தடை செய்யப்பட்ட போதைப் பொருட்களை பதுக்கி வைத்திருந்த கடைக்கு சீல் வைத்த மாநகராட்சி அதிகாரிகள்.

மேலும் , காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் உத்தரவின்படியும்  காஞ்சிபுரம் மாநகராட்சி ஆணையர் வழிகாட்டுதளின்படியும்  , காஞ்சிபுரம் மாநகரப்பகுதியில் தமிழ்நாடு அரசால் தடைசெய்யப்பட்ட குட்கா போன்ற புகையிலை பொருட்களை விற்பனை செய்த திருக்காலிமேடு, சதாவரம், பங்காரு அம்மன் தோட்டம், கருக்கினிள் அமர்தவள் கோயில் தெரு மற்றும் கைலாசநாதர் கோயில் தெரு ஆகிய ஐந்து இடங்களில் உள்ள கடைகளில் தடைசெய்யப்பட்ட புகையிலை விற்பனை செய்ததை கண்டுபிடித்து அந்த கடைகளை மூடி சீல் வைக்கப்பட்டது.

இந்த ஐந்து கடை உரிமையாளர்களை காவல்துறையினர் கைது செய்து சயது நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி 15 நாட்கள் சிறையில் அடைக்கப்பட்டனர்.

எனவே, வணிகர்கள் தங்களது கடைகளில் தமிழ்நாடு அரசால் தடைசெய்யப்பட்ட எவ்விதபொருட்களையும் விற்பனை செய்யவோ, வாங்கவோ கூடாது மீறி ஆய்வில் கண்டுபிடித்தால் குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதுடன் கடைகளை மூடி சீல் வைக்கப்படும் என்பதை இதன் மூலம் எச்சரிக்கப்படுவதாக மாநகராட்சி செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top