Close
நவம்பர் 24, 2024 9:00 காலை

இது திட்டமிட்ட சதி : படித்தாலே புரியும்..!

இந்திய பார்லிமென்ட் -கோப்பு படம்

இது எதேச்சையாக நடக்கிறதா ? அல்லது திட்டமிட்ட சதியா? படித்தாலே புரியும்.

கடந்த 2022 ஜன. 29 – அமெரிக்காவின் நியூயார்க் டைம்ஸ் இதழ் இந்தியாவில் பெகாசஸ் என்ற இஸ்ரேலிய மென்பொருளை பயன்படுத்தி எதிர்கட்சியினர் உளவு பார்க்கப்பட்டதாக ஒரு செய்தியை வெளியிட்டது.

பின்னர் 2022 பிப். 1 – சரியாக இரண்டு தினங்கள் கழித்து இந்தியாவில் பட்ஜெட் கூட்டத் தொடர் தொடங்கிய நிலையில் பெகாசஸ் விவகாரத்தை வைத்து நாடாளுமன்றத்தை எதிர்கட்சிகள் முடக்கினர்.

2023 ஜன.24 – அதானி குழுமம் சட்டவிரோதமாக முதலீடு செய்வதாக கூறி அமெரிக்காவை சேர்ந்த ஹிண்டர்பெர்க் நிறுவனம் அறிக்கை வெளியிட்டது. 2023 பிப் 1 – 2023ம் ஆண்டு பட்ஜெட் கூட்டத் தொடர் முடக்கப்பட்டது

2023 மே -3 – மெய்தி இன மக்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்ப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து குக்கி இன மக்கள் போராட்டம் நடத்தினர். இந்தப் போராட்டத்தில் வன்முறை வெடித்து இரு தரப்பிலும் நூற்றுக்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்

2023 மே – 4 கலவரக்காரர்களால் இரண்டு பெண்கள்  நிர்வாணப்படுத்தப்பட்டு பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டனர்.

2023 ஜூன் 21 – இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறை வழக்கு பதிவு செய்தது.

2023 ஜூலை 20  – நாடாளுமன்ற கூட்டத் தொடர் தொடங்க விருந்த நிலையில் அதற்கு ஒரு நாளைக்கு முன்னதாக, கிட்டத்தட்ட இரண்டு மாதங்கள் கழித்து இந்த வீடியோ நாடு முழுவதும் வைரலானது இந்த வீடியோவை வைத்து நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடரை எதிர்கட்சிகள் முடக்கினர்.

2024 ஜனவரி 21 –  நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் 25ம் தேதி தொடங்க உள்ள நிலையில் அதானி குழுமம் மீது அமெரிக்கா நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இப்போது அந்த விவகாரம் மீண்டும் பெரிதாக வெடித்துள்ளது. நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் முழுவதும் இந்த வீடியோ விவகாரம் எதிரொலிக்கும் என எதிர்பார்க்கலாம்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top