சோழவந்தான் :
மதுரை மாவட்டம், விக்கிரமங்கலம் அருகே, செல்லம்பட்டி ஒன்றியம் முதலைக்
குளம் ஊராட்சியில், நடந்த கிராம சபை கூட்டத்திற்கு, தலைவர் பூங்கொடி
பாண்டி தலைமை தாங்கினார்.
செயலாளர் பாண்டி அறிக்கை வாசித்தார். பானாமூப்பன்பட்டி கிராமத்தில், நடந்த கிராமசபை கூட்டத்தில் தலைவர் மகாராஜன் தலைமை தாங்கினார். செயலாளர் பாண்டி அறிக்கை வாசித்தார்.
விக்கிரமங்கலம் ஊராட்சியில், மம்பட்டிபட்டி கிராமத்தில் தலைவர் கலியுகநாதன் தலைமை தாங்கினார். செயலாளர் பால்பாண்டி அறிக்கை வாசித்தார்.
ஏரவார்பட்டி ஊராட்சியில் தலைவர் பொறுப்பு செந்தாமரை தலைமை தாங்கினார். செயலாளர் மலைச்சாமி அறிக்கை வாசித்தார்.
வாடிப்பட்டி ஊராட்சி ஒன்றியம், ரிஷபம் ஊராட்சியில், ஊராட்சி மன்ற தலைவர் சிறுமணி தலைமை தாங்கினார். துணைத் தலைவர் முன்னிலை வகித்தார். ஊராட்சி செயலாளர் அறிக்கை வாசித்தார்
திருவாலவாயநல்லூர் ஊராட்சியில், தலைவர் சகுபர்சாதிக் தலைமை தாங்கினார். துணைத் தலைவர்மாலிக் முன்னிலை வைத்தார். செயலாளர் வேலன் அறிக்கை வாசித்தார்.
முள்ளிப்பள்ளம் ஊராட்சியில், தலைவர் பழனிவேல் தலைமை தாங்கினார். துணைத் தலைவர் கேபிள் ராஜா முன்னிலை வகித்தார். செயலாளர் மனோபாரதி அறிக்கை வாசித்தார்.
தென்கரை ஊராட்சி தலைவர் மஞ்சுளா அய்யப்பன் தலைமை தாங்கினார். துணைத்தலைவர் கிருஷ்ணன் முன்னிலை வைத்தார். செயலாளர் முனியராஜ் அறிக்கை வாசித்தார்.
மேலக்கால் ஊராட்சியில், முருகேஸ்வரி வீரபத்திரன் தலைமை தாங்கினார். துணைத் தலைவர் சித்தாண்டி முன்னிலை வகித்தார். ஊராட்சி செயலாளர் விக்னேஷ் அறிக்கை வாசித்தார்.
இதில் ,வார்டு உறுப்பினர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டனர். இதே போல், இரும்பாடி ஊராட்சியில் ஈஸ்வரி பண்ணை செல்வம், நாச்சிகுளம் ஊராட்சியில் ஊராட்சி மன்ற தலைவர் சுகுமாரன் ஆகியோர் தலைமைதாங்கி,கிராம சபை கூட்டங்களை நடத்தினர்.
இதில் துணைத்தலைவர், வார்டு உறுப்பினர்கள், பற்றாளர், கிராம நிர்வாக அலுவலர், தலைமை ஆசிரியர், அங்கன்வாடி பணியாளர், சுகாதார மருத்துவப்பணியாளர் உட்பட கிராம பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
துப்புரவு பணியாளர்களை கௌரவிக்கும் விதமாக அனைத்து ஊராட்சிகளிலும் அவர்களுக்கு பொன்னாடை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.