Close
நவம்பர் 25, 2024 3:53 மணி

மதுரை, கலைஞர் நூற்றாண்டு ஏறு தழுவுதல் அரங்கத்தில் நாட்டுநல பணித்திட்ட சிறப்பு முகாம்..!

கூடல் நகர் புனித அந்தோணியார் பெண்கள் மேல்நிலைப் பள்ளியின் சார்பில் நடந்த நாட்டு நலப்பணித் திட்ட சிறப்பு முகாமில் பங்கேற்ற மாணவிகள்.

மதுரை:

மதுரை, கூடல் நகர் புனித அந்தோனியார் பெண்கள் மேல்நிலைப் பள்ளியின் சார்பில்,
நாட்டு நலப்பணித்திட்ட சிறப்பு முகாம் மற்றும் களப்பயணம் நடைபெற்றது.

இதில், அலங்காநல்லூர் கீழக்கரை கிராமத்தில் அமைந்துள்ள கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கத்தை, மதுரை மாவட்ட சுற்றுலா அலுவலர் சோ.மு.ஸ்ரீ பாலமுருகன் ஆலோசனையின் படி, இயற்கை ஆர்வலர் துரை விஜயபாண்டியன் வழிகாட்டுதல் படியும் களப்பயணம் மேற்கொண்டனர்.

மேலும்,நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் நீதிமணி, நாட்டு நலப்பணித்
திட்ட உதவி அலுவலர் மரிய லூர்து மேரி மற்றும் நாட்டு நலப்பணித்திட்ட 25 மாணவிகள் உள்ளிட்டோர் பார்வையிட்டனர்.

களப்பயணத்தில் ஜல்லிக்கட்டின் தமிழக பாரம்பரியத்தையும், வரலாற்றினையும் அரங்கத்தில் அமைந்துள்ள கண்காட்சி கூடத்தினை பார்வையிட்டும், காணொளி காட்சி வழியாகவும், மேலும், நூலகத்தின் புத்தகங்களை படித்தும் அறிந்து கொண்டனர்.

மதுரை மாவட்டம், மட்டுமல்லாது தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவ மாணவியர்கள் மற்றும் பொதுமக்கள் இந்த கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கத்தினை பார்வையிட்டு, நமது தமிழக கலாச்சாரத்தையும், பண்பாட்டினையும் பாரம்பரியத்தையும் தெரிந்து கொள்ள வேண்டும் என்று கூறினார்கள்.

இதில்,கலந்து கொண்ட மாணவியர்களுக்கு, அலுவலக உதவியாளர் விக்னேஷ் ஜல்லிக்கட்டு தமிழக பாரம்பரியம், ஜல்லிக்கட்டு வரலாறு மற்றும் கண்காட்சி உள்ளிட்ட வைகளை எடுத்துக் கூறினார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top