Close
நவம்பர் 25, 2024 7:52 மணி

நஞ்சை நிலத்தில் கல்குவாரி அமைக்க எதிர்ப்பு: ஆட்சியரிடம் கிராம மக்கள் மனு

புதிய கல்குவாரி அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து மாம்புதூர் கிராம பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளிக்க வந்தபோது

நஞ்சை நிலத்தில் கல்குவாரி அமைக்க மாம்புதூர் கிராம பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து மாவட்ட ஆட்சியரிடம் மனு வந்ததால்  பரபரப்பு ஏற்பட்டது.

காஞ்சிபுரம் மாவட்டம்,  உத்திரமேரூர் வட்டம்,  சாலவாக்கம் அடுத்த சின்னாளம்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட மாம்புதூர் கிராமத்தை சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட மக்கள் இன்று காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் ஏரி அடிவாரத்தில் நஞ்சை நிலத்தில் கல்வாரி அமைப்பதற்கு ஆட்சேபனை தெரிவித்து மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வியிடம் மனு அளித்தனர்.

அம்மனுவில், சாலவாக்கம் அடுத்த மாம்புதூர் கிராம ஏரி அடிவாரத்தில் அமைந்துள்ள சர்வே எண் 186 இல் உள்ள மேய்க்கால் புறம்போக்கு நிலத்தில் சுமார் 25 ஆண்டுகளாக வேளாண் காடு வளர்ப்பு திட்டத்தின் கீழ் மரங்களை நட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது. அதில் இருக்கும் நாவல் மரங்களை சேதப்படுத்தி மற்றும் ஏரி பாசன கால்வாய் மற்றும் தாங்கல் ஏரி வருவாய் கால்வாய்களை நான்கு ஆண்டுகளாக சென்னையை சேர்ந்த வாசன் என்பவர் சேதப்படுத்தி வருகிறார்.

இதுகுறித்து பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் கேட்டால் அப்பகுதி நிலத்தில் கல்குவாரி அமைக்க உள்ளதாக கூறி அனைவரையும் பயமுறுத்தும் வகையில் நடந்து கொள்கிறார்.

இந்த ஏரியை நம்பி சுமார் 100 ஏக்கர் நிலத்தில் இரண்டு போகம் விவசாயம் செய்து அப்பகுதி மக்கள் வாழ்வாதாரத்தை செய்து ஒரு நிலையில் இது போன்று புதிய கல்குவாரிகள் அமைந்தால் விவசாயம் பெரிதும் பாதிக்கப்படும் எனவும், வேளாண் காடு திட்டம் முற்றிலும் அழிக்கப்பட்டு வரும் நிலையை தவிர்க்க புதிய கல்குவாரிக்கு அனுமதி தரக்கூடாது எனவும், ஏற்கனவே அது செயல்பாட்டுக்கு அனுமதி அளித்திருந்தாலும் அதனை ரத்து செய்ய வேண்டும் எனவும் இதில் குறிப்பிட்டிருந்தனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top