Close
நவம்பர் 26, 2024 9:25 காலை

உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் : 2000 மாணவ,மாணவிகள் கலந்து கொண்ட விளையாட்டு போட்டி..!

உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசு வழங்கிய போது எடுத்த படம்.

தென்காசியில், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் 48-வது பிறந்த நாளை முன்னிட்டு யோகா, ஸ்கேட்டிங் போன்ற விளையாட்டை ஊக்குவிக்கும் பொருட்டு 2000 ஆயிரம் மாணவ மாணவிகள் பங்கேற்ற விளையாட்டு போட்டி நடத்தப்பட்டது.

நாளை  27-ஆம் தேதி தமிழக துணை முதல்வரும், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலினின் பிறந்த நாள் கொண்டாடப்பட உள்ள நிலையில், தமிழகம் முழுவதும் பல்வேறு நலத்திட்டங்கள் வழங்கி கொண்டாடி வருகின்றனர்.

அதே போல் தென்காசி மாவட்டம் ஐந்தருவி செல்லும் வழியில் உள்ள செய்யது பள்ளியில் விளையாட்டு போட்டி நடத்தப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு தென்காசி தெற்கு மாவட்ட பொறுப்பாளர் வே.ஜெயபாலன் தலைமை தாங்கினார்.

தென்காசி சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர் கலைக் கதிரவன் கலந்து கொண்டு போட்டிகளை துவக்கி வைத்தார். தமிழனின் பாரம்பரிய கலையான யோகாக்கலை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் யோகாசான போட்டியில் 1000 மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.

மேலும் ஸ்கேட்டிங் போட்டியும் நடத்தப்பட்டது. பள்ளி குழந்தைகள் ஆர்வத்துடன் போட்டிகளில் கலந்து கொண்டனர். போட்டிகளில் கலந்து அனைத்து மாணவ மாணவிகளுக்கும் கேடயம் மற்றும் பரிசு சான்றிதழ்களும் வழங்கப்பட்டது.

மேலும் மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் கிருஷ்ணராஜா, ஒன்றிய செயலாளர்கள் அழகுசுந்தரம்,mpm அன்பழகன், திவான் ஒலி, மகேஷ் மாயன், சுரண்டை நகர செயலாளர் A g கணேசன், இலஞ்சி பேரூராட்சி மன்ற தலைவர் சின்னதாய்,

பேரூர் செயலாளர்கள் A. சுடலை, ராஜராஜன், மாவட்ட மாணவரணி அமைப்பாளர் J. K.ரமேஷ், யூனியன் சேர்மன்கள் திவ்யா மணிகண்டன், ஷேக் அப்துல்லா, துணைச் சேர்மன் கனகராஜ் முத்துப்பாண்டியன், இளைஞரணி துணை அமைப்பாளர்கள் சுப்பிரமணியன்,

முகமது ரஹிம், வழக்கறிஞர் சிவக்குமார், மகளிரணி மற்றும் மகளிர் தொண்டரணி நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top