தென்காசி மாவட்டம் ஆய்க்குடி அருகே தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் தேசிய சட்ட தின விழாவை கொண்டாடும் வகையில் பள்ளி கல்லூரி மாணவ மாணவிகளுக்கான பேச்சுப்போட்டி கட்டுரை போட்டி ஓவியப்போட்டி வினாடி வினா போட்டி நடைபெற்ற நடைபெற்றது. இதில் தென்காசி மாவட்டத்தைச் சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட பள்ளி கல்லூரி மாணவ மாணவிகள் போட்டியில் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.
இறுதியாக விழாவில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கும் விழா நடைபெற்றது இதில் தென்காசி நகர மன்ற தலைவர் சாதிர் தென்காசி மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி ராஜவேல் மற்றும் முதன்மை கல்வி அலுவலர் ரெஜினி,பாலிடெக்னிக் கல்லூரி தாளாளர் புதிய பாஸ்கர் ஆகியோர் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கினார்.
தொடர்ந்து முதன்மை நீதிபதி தெரிவித்த போது தேசிய சட்ட தின விழா இந்திய அரசியலமைப்புச் சட்டம் ஏற்றுக்கொள்ளப்பட்ட தினமான நவம்பர் 26 ஆம் தேதி தேசிய சட்ட தினமாக வருடம் தோறும் கொண்டாடப்பட்டு வருகிறது.
அந்த வகையில் மாணவர்கள் அறியும் வகையில் இது போன்ற போட்டிகளை நடத்துவதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன் எனவும் இது பற்றி நீங்கள் அறிந்து பயனடைய வேண்டும் எனவும் அப்போது அவர் கேட்டுக் கொண்டார்.
இந்த நிகழ்வில் அரசு பள்ளி மற்றும் மாணவ மாணவிகள் கல்லூரி மாணவ மாணவிகள் ஆசிரியர்கள் என திரளானோர் இவ்விழாவில் கலந்து கொண்டனர்.