Close
நவம்பர் 26, 2024 10:45 காலை

3 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை

வங்கக் கடலில் நிலை கொண்டிருக்கும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தமிழகத்தின் டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.

இதனால், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, திருவாரூர் ஆகிய மூன்று மாவட்ட பள்ளிக் கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர்.

மேலும் புதுச்சேரி மாநில காரைக்கால் மாவட்டத்திற்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர் மற்றும் கடலூர் மாவட்டங்களில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை மாவட்ட நிருவாகத்துடன் ஒருங்கிணைந்து கண்காணித்திட மாவட்ட கண்காணிப்பு அலுவலர்கள் விரைந்துள்ளனர்.

கனமழை எச்சரிக்கையை தொடர்ந்து தஞ்சை மாவட்டத்திற்கான உதவி எண் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, 93450 88997 என்ற எண்ணை தொடர்பு கொண்டு பருவமழை தொடர்பான புகார்களை தெரிவிக்கலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பாண்டிச்சேரி மாநிலம் காரைக்கால் பகுதியில் கன மழை எச்சரிக்கை எதிரொலியாக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள அரக்கோணம் தேசிய பேரிடர் மீட்பு படை 30 கொண்ட வீரர்கள் சாலை மார்கமாக விரைந்தனர்.

வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் வேதாரண்யம் சன்னதி கடல் பகுதியில் 50 கி.மீ தூரத்திற்கு கடல் உள்வாங்கியது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top