Close
ஏப்ரல் 3, 2025 12:36 மணி

காங்கிரஸ் கட்சி சார்பில் அரசமைப்பு தின உறுதிமொழி..!

தென்காசி காந்தி சிலை முன்பு காங்கிரஸ் கட்சியினர் உறுதிமொழி எடுப்பதை படத்தில் காணலாம்

காங்கிரஸ் கட்சி சார்பில் இந்திய அரசமைப்புச் சட்ட தின உறுதிமொழி எடுக்கப்பட்டது.

1949 – ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 26 ஆம் நாள் இந்திய அரசமைப்புச் சட்டம் இயற்றப்பட்டது. அதனுடைய 75வது ஆண்டு தொடக்க நாளான இன்று அரசு அமைப்புச் சட்டத்தின் முகப்புரையை உறுதிமொழி எடுக்க வேண்டுமென தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப் பெருந்தகை தெரிவித்து இருந்தார்.

அதன் அடிப்படையில் தென்காசி மாவட்டம், தென்காசி நகர காங்கிரஸ் கட்சி சார்பில் காந்தி சிலை முன்பு நகரத் தலைவர் மாடசாமி ஜோதிடர் தலைமையில் காங்கிரஸ் கட்சியினர் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். இந்நிகழ்ச்சியில் மாவட்ட பொது செயலாளர்கள் சந்தோஷ்,கோவிந்தராஜுலு,நகரத் துணைத் தலைவர் சித்திக், நகர் மன்ற உறுப்பினர்கள் சுப்பிரமணியன், ரபிக், நகரப் பொருளாளர் ஈஸ்வரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top