Close
நவம்பர் 26, 2024 11:57 காலை

டிஜிட்டல் இந்தியா திட்டத்தில் நவீன பான்கார்டு 2.0..! அசத்தல் அறிமுகம்..!

புதிய பான் கார்டு

பான் கார்டு வருமானவரித்துறை மூலமாக வழங்கப்படும் ஒரு முக்கியமான அடையாளம் ஆகும். தற்போது பலரும் பான் கார்டு பயன்படுத்தி வருகின்றனர். நிதி பரிவர்த்தனை தொடர்பான அத்தனை நடவடிக்கைகளுக்கும் பான் கார்டுதான் தனி அடையாளமாக பயன்படுத்தபப்ட்டு வருகிறது. ஒருவர் ஒரு பான் அட்டை மட்டும்தான் வைத்திருக்க முடியும்.

இப்படி நிதி சார்ந்த பரிவர்த்தனைகளுக்கு முக்கியத்துவம் வாய்ந்த பான் அட்டையில் பல்வேறு நவீன அம்சங்களை அறிமுகப்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. அதன்படி டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் கீழ் பான் அட்டை 2.0 என்ற அடையாளத்துடன் நவீன அட்டை அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

இந்த நவீன அட்டையில் க்யூ ஆர் கோடு இடம் பெற்றிருக்கும். தற்போது பயன்படுத்தப்படும் பான் அட்டையில் எண், எழுத்து என இரண்டும் கலந்து 10 இலக்க அடையாளக் குறியீடாக இருக்கும். இதே நடைமுறை நவீன பான் அட்டை 2.0 -வில் க்யூஆர் கோடாக மாற்றப்படுகிறது.

இதன் மூலம் வரி செலுத்துவோருக்கு மேம்படுத்தப்பட்ட இலகுவான டிஜிட்டல் சேவை கிடைப்பதுடன் வெளிப்படைத் தன்மையும் அதிகரிக்கும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. இந்த புதிய நடைமுறையை செயல்படுத்த ரூ.1,435 கோடி நிதி ஒதுக்கீடு செய்ய மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. .

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top