சின்னசேலம் அருகே கணவன் இறந்த துயரத்தில் மனைவியும் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அருகே உள்ள காட்டானந்தல் கிராமத்தில் வசிப்பவர் செல்லமுத்து வயது (75. இவர் கடந்த ஐந்து வருட காலமாக உடல்நிலை சரியில்லாமல் வீட்டில் இருந்து வந்தார். இதனையடுத்து நேற்று இரவு மூச்சுத் திணறல் காரணமாக அவர் இறந்து விட்டார்.
கணவர் இறந்த சோகத்தில் அவரது மனைவி ஏலக்கண்ணி வயது (63) இரவு முழுவதும் அழுது கொண்டிருந்தார்.
இந்நிலையில் இன்று அதிகாலை 1.30 மணிக்கு அவரும் உயிரிழந்தார். இறந்த இந்த தம்பதியினருக்கு ஒரு மகன், மூன்று மகள்களும் உள்ளது குறிப்பிடத்தக்கது.
இச்சம்பவம் அந்த கிராமத்தையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.