வங்கக் கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், வரும் 27ம் தேதி புயலாக வலுப்பெறும் என்றும், இது எப்போது, எங்கே கரையைக் கடக்கும் என்று கணிக்கப்படவில்லை எனவும் தென்மண்டல ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
நாளை நவம்பர் 27ம் தேதி பயுலாக வலுப்பெற்று, 29ஆம் தேதி வரை புயலானது 150 முதல் 250 கிலோ மீட்டர் தொலைவில் கடற்கரைக்கு இணையாக நகரும் என்று பாலச்சந்திரன் கூறியிருக்கிறார்.
புயல் சின்னம் மணிக்கு 12 கி.மீ. வேகத்தில் நகர்கிறது. கடற்கரைக்கு இணையாக 29ஆம் தேதி வரை நகரும். கரையை கடக்கும் இடம் கணிக்கப்படவில்லை.
புயலாக மாறினால் ஃபெங்கல் என பெயரிடப்படும். தெற்கு வங்கக் கடலின் மத்திய பகுதிகள், அதனை ஒட்டிய கிழக்கு இந்தியப் பெருங்கடல் பகுதியில் நிலவிய புயல் சின்னம் இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று இலங்கை – திரிகோணமலையிலிருந்து தென்கிழக்கே 310 கி.மீ. தொலைவிலும், சென்னையிலிருந்து தெற்கு – தென்கிழக்கே 800 கி.மீ. தொலைவிலும் நிலைகொண்டுள்ளது எனவும் பாலச்சந்திரன் தெரிவித்தார்.