Close
நவம்பர் 28, 2024 10:58 காலை

பொதுசிவில் சட்டம் நிறைவேற்ற இந்து எழுச்சி முன்னணி தீர்மானம்..!

தேனி மாவட்டம் சின்னமனூரில் நடந்த இந்து எழுச்சி முன்னணி பொதுக்கூட்டத்தில் பங்கேற்றவர்கள்.

தேனி மாவட்டம், சின்னமனூரில் இந்து எழுச்சி முன்னணி மாவட்ட பொதுக்குழு கூட்டம் மாவட்ட தலைவர் ராமராஜ் தலைமையில் நடைபெற்றது.

நிறுவனத்தலைவர் பொன்.இரவி, மாவட்ட பொருளாளர் க. செந்தில்குமார், சின்னமனூர் நகர தலைவர் சந்தனபாண்டியன், மற்  றும் மாவட்ட, நகர, ஒன்றிய பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

2024-ஆம் ஆண்டு ஜூலை 30-ஆம் தேதி அதிகாலையில் கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் வைத்திரி தாலுகா மேப்பாடி பஞ்சாயத்தில் உள்ள புஞ்சிரி மட்டம், முண்டக்கை, சூரல்மலா மற்றும் வெள்ளரிமலா கிராமங்களில் நடந்த தொடர் நிலச்சரிவில் மரணித்த அத்தனை பேர்களின் ஆத்மா நற்கதி அடைய இப்பொதுக்குழு பிரார்த்திக்கிறது.

2024- ஆண்டு நடந்த பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்று மூன்றாவது முறையாக பாரத பிரதமராக பொறுப்பேற்று தேசத்திற்கு எதிராக செயல்படும் பயங்கரவாதிகளையும், பிரிவினைவாதிகளையும் இரும்பு கரம் கொண்டு அடக்கி தேசத்தில் அமைதி நிலவ பாடுபட்டுக் கொண்டிருக்கும் மத்திய அரசுக்கும்,பிரதமர் நரேந்திரமோடிக்கும் பாராட்டுகளையும், வாழ்த்துகளையும், ஆதரவையும் இந்து எழுச்சி முன்னணி தெரிவித்துக் கொள்கிறது.

தேனி மாவட்டம் கம்பம், உத்தமபாளையம், தேவதானப்பட்டி போன்ற பகுதிகளில் அந்தப் பகுதிகளுக்கு சம்பந்தமில்லாத மத பயங்கரவாதிகளின் செயல்பாடு அதிகரித்து வண்ணம் உள்ளது. இதனை NIA கவனத்தில் கொண்டு பின்வரும் பாதிப்புகளிலிருந்து தேசத்தையும் , மக்களையும் காக்க வேண்டும் என இந்து எழுச்சி முன்னணி கேட்டுக்கொள்கிறது.

தமிழகத்தில் பூரண மதுவிலக்கை கொண்டு வந்து அப்பாவி பொதுமக்களின் உயிரை காக்க வேண்டிய தமிழக அரசானது கள்ளக்குறிச்சியில் மெத்தனால் கலக்கப்பட்ட கள்ளச்சாராயத்தை குடித்து உயிரிழந்த சுமார் 60க்கும் மேற்பட்டோருக்கு ரூபாய் 10,00,000 (பத்து லட்சம்) வீதம் நிவாரணம் அளித்து கொடிய அந்த உயிரிழப்பை மறைத்த செயலை இந்து எழுச்சி முன்னணி வன்மையாக கண்டிப்பதோடு, தமிழகத்தில் பூரணமதுவிலக்கை அமல்படுத்தி தமிழகத்தையும், தமிழக மக்களையும் காக்குமாறு தமிழக அரசை இந்து எழுச்சி முன்னணி கேட்டுக்கொள்கிறது.

கடந்த ஒரு வருடத்தில் தமிழகத்தில் வன்முறை சம்பவங்கள் அதிகரித்து உள்ளது கொலை,கொள்ளை,கற்பழிப்பு, மோசடி, ரவுடிகளின் அராஜகங்கள் போன்ற செயல்கள் அதிகரித்து வருகிறது. காவல்துறையும் கண்டுகொள்ளாமல் தங்கள் கடமையை உணராமல் செயல்பட்டு வருகிறது. இந்தப் போக்கினை தவிர்த்து தமிழக அரசும் காவல் துறையும் மக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் விதமாக தங்களது கடமையை உணர்ந்து செயல்பட வேண்டும் என இந்து எழுச்சி முன்னணி கேட்டுக்கொள்கிறது.

சின்னமனூர் நகராட்சிக்குட்பட்ட 27 வார்டுகளிலும் சாலை வசதி, தெருவிளக்கு வசதி, கழிவுநீர் வாய்க்கால் வசதி, சுகாதாரமான குடிநீர் வசதி, மருத்துவ வசதி போன்ற மக்களின் அடிப்படை தேவையான வசதிகளையும் மாவட்ட நிர்வாகமும், நகராட்சி நிர்வாகமும் மக்களுக்கு தடையின்றி செய்துதர வேண்டும் என இந்து எழுச்சி முன்னணி கேட்டுக்கொள்கிறது.

தேனி -அல்லி நகரத்தில் உள்ள மலை அடிவார கோவிலான  வீரப்ப அய்யனார் கோயிலுக்கு சொந்தமான இடத்தை கடந்த சில வருடங்களுக்கு முன்பு முறையாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அளவீடு செய்து முடித்த பின்பும் இன்னும் சிலருடைய நிர்பந்தத்தின் காரணமாக அளந்த அளவீட்டின் சரியான அளவுப்பிரகாரம் சுற்றுச்சுவர் எழுப்பாமல் காலதாமதம் செய்வது பக்தர்களிடையே மிகப்பெரிய அதிருப்தியையும், வருத்தத்தையும் ஏற்படுத்தி உள்ளதால் மாவட்ட நிர்வாகமும், இந்துசமய அறநிலையத்துறையும் துரிதமாக செயல்பட்டு ஸ்ரீ வீரப்ப அய்யனார் கோயிலுக்கு சொந்தமான இடத்தில் சுற்றுச்சுவர் எழுப்ப வேண்டுமாய் இந்து எழுச்சி முன்னணி கேட்டுக்கொள்கிறது.

இந்துக்களின் புனித ஸ்தலங்களில் ஒன்றான சுருளி அருவி மற்றும் அதன் நீரோட்டமிக்க ஆற்றுப்படுகையானதும் சுகாதாரமற்ற முறையிலும் அதன் புனிதமானது மாசுபடும் விதத்திலும் உள்ளது.

முப்பத்து முக்கோடி தேவர்களும், நாற்பத்து எண்ணாயிரம் ரிஷிமார்களும் வாசம் செய்யும் புண்ணிய ஸ்தலமான சுருளி அருவியையும் அதன் சுற்றுவட்டார பகுதிகளையும் புனித ஸ்தலமாக மாவட்ட நிர்வாகமும், இந்துசமயஅறநிலைத்துறையும் அறிவித்து அதன் புனிதத்தை காக்குமாறு இந்து எழுச்சி முன்னணி கேட்டுக் கொள்கிறது.

பாரத தேசம் முழுவதும் இந்து மக்கள் தொகை மிகப்பெரிய சரிவை நோக்கி சென்று கொண்டிருப்பதாக ஆய்வறிக்கை சொல்வது இந்து மக்களுக்கான எச்சரிக்கை என்பதாலும், ஆபத்து என்பதாலும் தேசத்தில் இந்துக்கள் இடையே மிகப்பெரிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டிய பொறுப்பு இந்து இயக்கங்களுக்கு உள்ளதால் இந்து எழுச்சி முன்னணி சார்பாக விழிப்புணர்வு கூட்டங்களை நடத்துவது என தீர்மானிக்கப்பட்டது.

நமது பாரத தேசத்தில் தற்போது நடைமுறையில் உள்ள ஒவ்வொரு மதத்திற்கும் தனித்தனி சிவில் சட்டம் என்ற நிலையை மாற்றி பாரத முழுவதற்குமான பொது சிவில் சட்டத்தை மத்திய அரசு பாராளுமன்றத்தில் நிறைவேற்றி விரைவில் அமலுக்கு கொண்டுவர வேண்டும் என இந்து எழுச்சி முன்னணி மத்திய,மாநில அரசுகளை வலியுறுத்துகிறது.

தமிழகத்தில் அடிப்படை சுகாதார நிலையங்கள் மற்றும் அரசு மருத்துவமனைகளில் போதுமான அளவு மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவமனை ஊழியர்கள் இல்லாத பற்றாக்குறை நிலை தற்போது உள்ளது. இதனால் ஏழை,எளிய மக்கள் தங்களது மருத்துவ தேவைகளை சரிவர  பெறமுடியாத அவலம்  நிலவி வருகிறது. மேலும் அரசு மருத்துவமனைகளில் போதுமான அளவு மருத்துவ உபகரணங்கள், மருந்து, மாத்திரைகள் இருப்பு கையாளப்படுவதில்லை.

எனவே ஏழை, எளிய நோயாளிகளின் உடல்நலத்தையும், மனநலத்தையும் கருத்தில் கொண்டு தமிழக அரசு இந்த நிலையை சரி செய்ய வேண்டும் என இந்து எழுச்சி முன்னணி கேட்டுக்கொள்கிறது. பொதுக்குழு கூட்டத்தில் இந்து எழுச்சி முன்னணி பொறுப்பாளர்கள், இந்து எழுச்சி அன்னையர் முன்னணி பொறுப்பாளர்கள், கிளை கமிட்டி பொறுப்பாளர்கள் இயக்க ஆதரவாளர்கள்  200- க்கும் மேற்பட்ட பொறுப்பாளர்கள் கலந்துகொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top