குறுகிய கால பயிற்சி- ஆட்சியர்
சிவகங்கை :
அரசு தொழிற்பயிற்சி நிலையத்தின் ஐடிஐ, டாடா தொழில் 4.0 மையத்தில்
குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனத்தில் பணிபுரிபவர்கள் (MSME Workers), பாலிடெக்னிக் மற்றும் பொறியியல் கல்லூரியில் பயிலும் மாணவர்கள், வேலைதேடும் இளைஞர்கள் பயன்பெறும் வகையில், குறுகிய கால பயிற்சி நடைபெறவுள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் ஆஷா அஜித், தெரிவித்தில்லாதாவது :-
சிவகங்கை மாவட்டம், முத்துப்பட்டியிலுள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் அமைந்துள்ள டாடா தொழில் 4.0 எனும் நவீன உயர் உற்பத்தி தொழிற்நுட்ப மையத்தில் 3D Printing, Laser cutting, Internet of Things, Robotic CO2 Welding, Mechanic Electric vehicle, CNC Lathe Machining போன்ற 23 வகையான நவீன Customized Short term Courses குறைந்த கட்டணத்தில் தொடங்கப்படவுள்ளது.
இக்குறுகிய கால பயிற்சியில், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனத்தில் பணிபுரிபவர்கள் (MSME Workers), பாலிடெக்னிக் மற்றும் பொறியியல் கல்லூரியில் பயிலும் மாணவர்கள், வேலைதேடும் இளைஞர்கள் ஆகியோர் சேர்ந்து தங்கள் திறனை மேம்படுத்தி கொள்ளலாம்.
மேலும், Customized குறுகிய கால பயிற்சியானது 40 அல்லது 60 மணி நேரங்கள் நடத்தப்படும் எனவும், இப்பயிற்சியில் கலந்து கொள்ள, குறைந்த கட்டணமாக ஒரு மணி நேரத்திற்கு ரூ.25/-மட்டுமே பயிற்சி கட்டணமாக செலுத்த வேண்டும்.
அதுமட்டுமன்றி, பயிற்சி முடித்தவுடன் அரசு சான்றிதழ் வழங்கப்படும். வேலைநாட்களில், முத்துப்பட்டியிலுள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் அமைந்துள்ள TATA தொழில் 4.0 எனும் நவீன உயர் உற்பத்தி தொழிற்நுட்ப மையத்தை
நேரிலும் பார்வையிடலாம்.
மேலும், இக்குறுகிய கால பயிற்சி வாய்ப்பினை குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனத்தில் பணிபுரிபவர்கள் (MSME Workers), பாலிடெக்னிக் மற்றும் பொறியியல் கல்லூரியில் பயிலும் மாணவர்கள், வேலைதேடும் இளைஞர்கள் ஆகியோர் நன்முறையில் பயன்படுத்தி, தொழில் 4.0 மையத்திலுள்ள நவீன தொழிற்நுட்பங்களை கற்று தங்களது திறனை வளர்த்துகொள்ள வேண்டும்.
Customized Short term Courses சேர்க்கை தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு 9944887754, 9943610476, 9965480973, 8015217246, 9942099481 என்ற அலைபேசி எண்களின் வாயிலாக தொடர்பு கொண்டு விபரங்கள் பெறலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் ஆஷா அஜித்,
தெரிவித்துள்ளார்.