Close
நவம்பர் 28, 2024 4:56 மணி

பெரியபாளையம் அருகே கால்வாய் ஆக்கிரமிப்புகளை அகற்ற முதலமைச்சருக்கு பொதுமக்கள் கோரிக்கை..!

குறுகிப்போன கால்வாய்

பெரியபாளையம் ஊராட்சி கலைஞர் நகர் சின்னம்பேடு கால்வாய் கரையை ஆக்கிரமித்து நூற்றுக்கணக்கான வீடுகள் கட்டியதால் கால்வாய் அகலம் குறைந்து காணப்படுவதோடு ஏரிக்கு சீராக தண்ணீர் செல்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. ஆக்கிரமிப்புகளை அகற்றி கரையை பலப்படுத்திட வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி தொகுதிக்கு உட்பட்ட சின்னம்பேடு பகுதியில் 1550 ஏக்கர் பரப்பளவில் பெரிய ஏரி உள்ளது. இந்த ஏரியின் நீர் ஆதாரத்தை நம்பி ஏறி சுற்றி சுமார் 4500.க்கு மேற்பட்ட விலை நிலங்களில் அப்பகுதியில் உள்ள விவசாயிகள் நெல், வெண்டை,கத்தரி, முள்ளங்கி,கீரை வகைகள்,நிலக்கடலை, வாழை உள்ளிட்ட பருவத்திற்கு ஏற்ப பயிர்களை நடவு செய்து விவசாயம் நம்பி வாழ்ந்து வருகின்றனர்.

கால்வாய் இல்லாமல் மூடிப் போன பகுதி

இந்த நிலையில் இந்த பெரிய ஏரிக்கு தண்ணீர் சீராக வந்து சேர்வதற்கு பெரியபாளையம் ஆரணி ஆற்றின் பகுதியில் இருந்து சின்னம்பேடு வரை சுமார் 12 கிலோமீட்டர் தூரத்திற்கு கால்வாய் அமைக்கப்பட்டுள்ளது.

மழை காலங்களில் ஆரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டும் போதெல்லாம் தண்ணீர் இந்த சின்னம்பேடு கால்வாயில் திருப்பி விடப்பட்டு அந்தத் தண்ணீரை சேமித்து அப்பகுதியில் உள்ள அந்தத் தண்ணீரைக் கொண்டு விவசாயிகள் முப்போகம் விவசாயம் செய்து வந்தனர். தற்போது இந்த கால்வாயில் இரு புறம் தனி நபர்கள் கரையை ஆக்கிரமித்து பெரிய அளவில் கட்டிடங்களை கட்டி வசித்து வருகின்றனர்.

இதனால் கால்வாய் அளவு ஆனது 150.அடியிலிருந்து 15.அடி மட்டுமே காணப்பட்டு வருகின்றது.இதனை அடுத்து இது குறித்து சமூக ஆர்வலர்கள், நீர் பாசன சங்க முன்னாள் தலைவர் ஜெயமோகன், இந்நாள் தலைவர் சோமு முதலியார் பொதுமக்கள் சிலர் கூறும்போது,

இந்த சின்னம்பேடு கால்வாய் அமைக்கப்பட்ட போது கால்வாய் மையப் பகுதியில் இருந்து இரு புறம் சுமார் 150 அடி அகலம் இருந்தது. பெரியபாளையம் ஊராட்சி கலைஞர் நகர் கிழக்கு காவல் துறை குடியிருப்பு பின்புறம் சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோர் இரு புறங்களில் கால்வாய் கரையை ஆக்கிரமிப்பு செய்து கட்டிடங்களை கட்டி வாழ்ந்து வருகிறார்கள்.

மேலும் வீடுகளில் இருந்து கழிவு நீரையும் இந்த கால்வாயில் திருப்பி விடுகிறார்கள். நாளடைவில் கால்வாய் அகலம் குறைந்து வருவதாகவும் 150 அடியில் இருந்து தற்போது 15 அடி மட்டுமே கால்வாய் காணப்படுகிறது. பருவமழை காலங்களில் தூர்வார ஜேசிபி இயந்திரங்களை இதில் இறக்கி வேலை செய்ய முடியவில்லை.

கால்வாய் நிலத்தில் வீடுகள்

இதனால் இந்த கால்வாயில் அடர்ந்த செடி,கொடிகளும், முட்புதர்கள் வளர்ந்து உள்ளது. கடந்த காலத்தில் இந்த கால்வாயில் தண்ணீர் திருப்பி விட்டால் ஒரு நாளிலே தண்ணீர் சீறி கொண்டு சென்று சின்னம்பேடு ஏரி நிரம்பிய நிலையில் தற்போது 3 முதல் 4 நாட்களுக்கு மேலாகவே சென்று சேர்கிறது.

இந்த ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என பலமுறை மாவட்ட ஆட்சியருக்கும், சம்பந்தப்பட்ட பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கும், முதலமைச்சர் தனிப்பிரிவுக்கு மனு அளித்தோம். ஆனால் மாவட்ட ஆடசியரிடம் நேரில் சென்று முறையிட்டும் எந்த ஒரு நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

இதே நிலைமை நீடித்தால் விவசாயிகள் விவசாயம் செய்ய முடியாமல் நிலங்களை வீட்டு மனைகளுக்கு விற்பனை செய்வது தவிர வேறு வழி ஏதும் இல்லை. விவசாயிகள் நலனை கருதி முதலமைச்சர் தற்போதாவது நடவடிக்கை எடுத்து ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top