சாட்டிலைட் மொபைல் சேவையினை பி.எஸ்.என்.எல்., வெகு விரைவில் அறிமுகப்படுத்த உள்ளது.
BSNL தற்போது D2D (Direct to Device) எனும் அற்புதமான திட்டத்தை கொண்டு வந்துள்ளது. இதன் மூலம் இந்தியாவின் எந்த மூலையிலும், மலையோ, காடோ, எங்கு இருந்தாலும், சாட்டிலைட் மூலம் நம்முடைய் மொபைல் டிவைசை கனெக்ட் செய்து, தொடர்பு கொள்ளலாம்.
Starlink சாட்டிலைட் தொடர்புக்கு இணையான முயற்சி முதல் முறையாக உருவாகியுள்ளது. இதற்காக Viasat எனும் சாட்டிலைட்டை அர்ப்பணித்துள்ளது. ஏற்கனவே இந்திய ராணுவம், கடற்படை, விமானப்படை போன்ற முக்கிய இந்திய அமைப்புகள் இவற்றை உபயோகித்து வருகின்றனர்.
IMC 2024 எக்ஸிபிஷனில் இதனை முதல் முறையாக பொதுமக்களுக்கு காட்சிப்படுத்தினர். இதன் தொடர்ச்சியாக தற்போது பொதுமக்களுக்கும் இந்த சர்வீஸ் அளிக்க உள்ளனர். தற்போதைக்கு லிமிடெட் சர்வீஸ் என்ற அளவில் கொடுக்க உள்ளனர்.
– எமர்ஜென்சி கால் அல்லது SOS மெசேஜிங்
– UPI பேமண்ட் சிஸ்டம்
இதற்கென தனியாக சப்ஸ்கிரைப் செய்ய வேண்டி இருக்கும். அடுத்து Viasat 2 தயாரான பின்னர், இந்த சேவை மேலும் விரிவுபடுத்தப்பட்டு, அனைத்து சர்வீஸ்கள், ரெகுலர் கால்கள், இன்டர்நெட் உட்பட அளிக்க உள்ளனர். வாழ்த்துக்கள் BSNLக்கு!