Close
டிசம்பர் 4, 2024 6:57 மணி

5 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்

தமிழ்நாடு

தமிழக காவல்துறை அதிகாரிகள் இடமாற்றம்

தமிழகத்தில் 5 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

கூட்டுறவு பால் உற்பத்தியாளர் கூட்டமைப்பு நிறுவனத்தின் லஞ்ச ஒழிப்பு பிரிவு டிஜிபியாக ராஜீவ் குமார் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

ரயில்வே காவல்துறை டிஜிபியாக வன்னியபெருமாள் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

மாநில மனித உரிமைகள் ஆணையத்தின் ஐ.ஜியாக எஸ்.மல்லிகா நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

சாலை பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து காவல்துறை ஐஜியாக அபிஷேக் தீக்ஷித் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

குடிமைப்பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத்துறை எஸ்.பியாக முத்தமிழ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top