Close
டிசம்பர் 4, 2024 7:44 மணி

தலைகீழாக தொங்கும் சிசிடிவி கேமராக்கள்.. மக்கள் பாதுகாப்பு ?

சிசிடிவி தலைகீழாகத் தொங்கும் முக்கிய சாலை

காஞ்சிபுரம் அடுத்து தாமல் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள சிசிடிவி கேமராக்கள் தலைகீழாக தொங்கும் நிலையில் அப்பகுதி பொதுமக்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

காஞ்சிபுரம் அடுத்த சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் முக்கிய பகுதியாக திகழ்வது தாமல் கிராமம். விவசாயம் பிரதான தொழிலாக இப்பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் அப்பகுதியில் பொதுமக்கள் நலனுக்காக அரசினர் மேல்நிலைப்பள்ளி,

தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கம், சார்பதிவாளர் அலுவலகம், மின்வாரிய அலுவலகம் கிராம நிர்வாக அலுவலகம் என பல இயங்கி வரும் முக்கிய பகுதியில் பொதுமக்கள் மற்றும் அப்பகுதியாக வரும் அனைவருக்கும் பாதுகாப்புடன் பயணிக்க செயல்படும் நோக்கில் காவல்துறை சார்பில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டது.

காஞ்சிபுரம் அடுத்த தாமல் பேருந்து நிலையம் அருகே அமைக்கப்பட்டுள்ள சிசிடிவி கேமராக்கள்

தற்போதைய காலகட்டத்தில் பல்வேறு குற்ற வழக்குகள் மற்றும் பல்வேறு சம்பவங்களை துல்லியமாக ஆராயவும் அதன் உண்மை தன்மை தெரிந்து கொள்வும் சிசிடிவிகள் பெரிதும்  பயன்படும் நிலையில்,  அங்கு அமைக்கப்பட்டுள்ள சிசிடிவிகள் அனைத்தும் செயல்படுகிறதா என்ற கேள்விக்குறியும், சிசிடிவி கேமராக்கள் தலை கீழாக தொங்கி உள்ளதால் அதனால் பொது மக்களின் பாதுகாப்பிற்கு எப்படி உதவும் எனவும் கேள்வி எழுந்துள்ளது.

குறிப்பாக சார் பதிவாளர் அலுவலகத்தில் பத்திரப்பதிவு மேற்கொள்ள வரும் நபர்கள் கொண்டு வரும் பணம் மற்றும் அருகில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் இருந்து கடன் பெற்று செல்லும் விவசாயிகள் உள்ளிட்டோரின் பணங்கள் பாதுகாப்புடன் இருக்குமா ?

இது மட்டும் இல்லாமல் அப்பகுதி வழியாக செல்லும் பேருந்தில் பயணிக்கும் பயணிகளின் பாதுகாப்பு உள்ளிட்டவைகள் சிசிடிவி கேமராக்கள் முறையாக இருக்கும் நிலையில் குற்றவாளிகள் கூட அச்சத்துடன்  குற்ற செயல்களை புரிய அஞ்சுவர்.

தாமல் பேருந்து நிலையம் அருகே தலைகீழாக தொங்கும் சிசிடிவி கேமரா

எனவே பாலு செட்டி காவல்துறையினர் உடனடியாக இந்த சிசிடிவி கேமராக்களை சரி செய்து பொதுமக்கள் பாதுகாப்புக்கு பெரிதும் உதவ வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top