Close
ஏப்ரல் 5, 2025 4:03 காலை

பங்களாதேஷின் சட்டத்தை பாருங்கள்..!

பங்களாதேஷ் நெருக்கடி-கோப்பு படம்

1971ல் பங்களாதேஷ் உருவாகும் போது இஸ்கான் உருவாக்கிய ஸ்ரீ பிரபு பாதா தன் நாட்டிற்காக 2.5 மில்லியன் அமெரிக்க டாலர்களை பாதயாத்திரை சென்று சேர்த்துக் கொடுத்தார். ஆனால் இன்று அதே பங்களாதேஷ் இஸ்கான் அமைப்பினை ஒரு பயங்கரவாத இயக்கம் என்பது போல நடத்துகிறது.

பங்களாதேஷ் இயற்கை சீற்றங்கள் பஞ்சம் என்று பிரச்சனைகளை எதிர்கொள்ளும்போது இஸ்கான் நிறுவனம் இஸ்லாமியருக்கு உணவு கொடுத்து வீடுகளை மறுபடி கட்டிக் கொள்வதற்கு உதவி செய்தது.

ஆனால் இஸ்லாமியர்கள் மனதில் அவர்கள் அல்லாத மற்றவர்களை காஃபிர்கள் என்று பதிந்து இருப்பதால் எப்பொழுதும் இப்படித்தான் நடக்கிறது. தங்களுக்கு நல்லது செய்தவர்களையே அவர்கள் அழிக்க பார்க்கிறார்கள்.

இப்பொழுது இஸ்கான் நிறுவனமும் சின்மோய் கிருஷ்ணதாஸ் இடமிருந்து விலகி விட்டது. ஏற்கனவே எல்லா பொறுப்புகளில் இருந்தும் அவர் விடுவிக்கப்பட்டு விட்டார் என்றும் சொல்கிறது.

இவ்வளவும் எதற்காக என்றால் பங்களாதேஷ் கொடியை தாண்டி உயரமாக காவி கொடியை சனாதன் ஜாக்ரன் மன்ச் சார்பாக சிட்டகாங்கில் ஒரு மார்க்கெட்டில் உயர்த்தி கட்டி விட்டார் என்பது தான் குற்றச்சாட்டு.

இது தேச துரோகம் என்று அவரை அரெஸ்ட் செய்த போது தெரிவித்துள்ளனர். அவரது ஹிந்து ஆதரவாளர்கள் அரசாங்கத்துக்கு எதிராக போராட்டம் நடத்திய பொழுது கடுமையான நடவடிக்கைகளை எடுத்தனர்.

இந்த ஹிந்து துறவிக்காக வாதாடியவர்கள் கொல்லப்பட்டனர். ஏற்கனவே ஹிந்துக்களுக்கு எதிராக பல வன்முறைகள் நடந்து பங்களாதேஷ் கொதி நிலையில் இருக்கும் வேளையில் இதுவும் சேர்ந்து கொண்டது.

துறவியின் நடவடிக்கைக்கும் சரி இந்த கொலைக்கும் சரி இஸ்கான் நிறுவனத்திற்கு எந்த சம்பந்தமும் இல்லை என்று இஸ்கான் சொல்கிறது. ஆனால் சம்பந்தப்படுத்தி அழுத்தமான நடவடிக்கைகள் எடுக்கிறது பங்களாதேஷ் அரசு.

ஆனால் இது பற்றி பேசக்கூட இந்தியாவில் ஆள் இல்லை. காரணம் இந்திய அரசின் மென்மையான சட்டங்களும், சட்ட நடவடிக்கைகளும், ஜனநாயக நடைமுறைகளும், மத சகிப்புத்தன்மையும், மதசார்பின்மையும், அனைவரும் ஒற்றுமையாக இணைந்து வாழும் சிறப்பான இந்திய பண்பாடும் தான்.

இந்தியாவில் மக்கள் எவ்வளவு அமைதி மற்றும் சுதந்திரத்துடன் வாழ்கின்றனர் என்பதை பல வெளிநாடுகளின் சூழ்நிலைகளை ஒப்பிட்டாவது தெரிந்து கொள்ளுங்கள்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top